தமிழியல் வினா விடைகள்
1) கடற்காற்று உடலுக்கு நன்மை தருவது. கடற்காற்று என்பது?
1) வேற்றுமைத் தொகை
2) வினைத்தொகை
3) உம்மைத் தொகை
4) பண்புத்தொகை
2) பகுபதமொன்றில் காலங்காட்டாத உறுப்பு?
1) பகுதி
2) விகுதி
3) இடைநிலை
4) சாரியை
3) பின்வருவனவற்றுள் விளித்தொடராக வருவது.?
1) தந்தை வந்தார்
2) மகனேவா
3) உண்டுமகிழ்ந்தார்
4) ஆடினாள் மாதவி
4) பின்வருவனவற்றுள் பெயரும் பெயரும்சேர்ந்த கூட்டுப் பெயருக்கு உதாரணம்?
1) வானொலி
2) இடிதாங்கி
3) அறிவாளி
4) தொலைக்காட்சி
5) சோழ நாடு என்பதை சோணாடு எனக் கூறுவது.?
1) மங்கலம்
2) குழுக்குறி
3) மருஉ
4) இடக்கரடக்கல்
6) படிக்கவோ வந்தாய் என்பதில் வந்துள்ள ஓகார இடைச் சொல் உணர்த்தும் பொருள்?
1) எச்சம்
2) ஒழியிசை
3) எண்
4) ஐயம்
7) களவெடுத்தவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்தனர். இதில் களவெடுத்தவனை என்பது?
1) வினையாலணையும் பெயர்
2) தெரிநிலைவினை
3) குறிப்பு வினை
4) வியங்கோள்வினை
8) பின்வருவனவற்றுள் பொருத்தமாக நிறுத்தற் குறியீடுகள் இடப்பட்டுள்ள வாக்கியம்?
1) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார்? ஏன் அழுகிறாய்” எனத் தந்தை வினாவினார்
2) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார்? ஏன் அழுகிறாய் ?” எனத் தந்தை வினாவினார்
3) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார்? ஏன் அழுகிறாய்? ” எனத் தந்தை வினாவினார்
4) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார், ஏன் அழுகிறாய் ” எனத் தந்தை வினாவினார்
9) இவ்வுலக வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது. இவ் வாழ்க்கையில் உற்றார் உறவினருடன் உள்ளங்கலந்து பேசுவதினால் துன்பம் குறையும். இன்பம் அவரோடு பேசுந் தோறும் நிறையும்.?
1) இன்பமும் துன்பமும் கலந்ததே இவ்வுலக வாழ்க்கை
2) வாழ்க்கையில் உற்றார் உறவினருடன் பேச வேண்டும்
3) உற்றார் உறவினரே இன்பதுன்பங்களுக்குக் காரணமாவார்
4) துன்பமின்றி இன்பமாக வாழ உற்றார் உறவினருடன் பேச வேண்டும்
10) அழகியற் கலைகளை ஆக்குவோர் கருவிலே திருவுடையார் எனக் கருதப்படுகின்றனர். அத்தகைய கலைப் படைப்புக்களை நயப்பது எளிதில் கைவந்து விடாது. அவற்றோடு பழகப் பழக நமது வயதும் உள முதிர்ச்சியும் வளர வளர அவற்றின் ஆற்றலை நாம் மேன்மேலும் ஆழமாக உணருவோம்?
1) கலைப்பயிற்சி அளிப்பவரினால் மட்டும் அழகியற் கலைகள் பற்றி உணரமுடியும்
2) அழகியற் கலைகளை ஆக்குபவரினால் தான் அழகியல் கலைகள் பற்றி உணர முடியும்
3) அழகியற் கலைகளுடன் பழகி உள முதிர்ச்சி பெற்றால் தான் அழகியற் கலைகள் பற்றி உணரமுடியும்.
4) அழகியற் கலைகளை உணரும் ஆற்றலை சிலர் முதுமையிலேயே பெறுவர்.