தமிழியல் வினா விடைகள்

1) "அம்பொன்று வில்லொடித்தல் நாண் அறுதல்" நாண் என்பதன் ஒத்தசொல்?
1) கயிறு
2) அம்பு
3) தநு
4) சிலை
2) "காணியின் அகலத்தை அளந்தனர்" அகலம் என்பதன் எதிர்சொல் ?
1) ஒடுக்கம்
2) நீளம்
3) தூரம்
4) குறுக்கம்
3) "சிக்கனமாக வாழ்வதே சிறந்தது" சிக்கனம் என்பதன் எதிர்ச்சொல் ?
1) இடாம்பீகம்
2) செலவு
3) ஊதாரி
4) உலோகம்
4) ஆழி, சமுத்திரம், சாகரம் எனப்பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல் ?
1) கண்டம்
2) கடல்
3) ஆலம்
4) மாலை
5) உலை ,உழை , உளை என்பன தரும் பொருள் முறையே?
1) மான், நீரலை,வருத்து
2) நீரலை, மான், அழுகை
3) நீரலை , அழுகை , மான்
4) மான் , அழுகை ,நீரலை
6) "AIDS நோய் மிகவும் ஆபத்தானது" AIDS என்பதன் தமிழ்ச்சொல்?
1) உதவி
2) ஏமக்குறைவுநோய்
3) மரபணுநோய்
4) தூய்மைக்கேடு
7) போரில் தோற்றுப் போன மன்னன் வெற்றி பெற்ற மன்னனுக்கு தன் நாடனைத்தும் சொந்தம் தான் ஒழுங்காக ஒரு தொகையைக் கப்பமாகச் செலுத்துவேன் என்றும் எழுதிக் கொடுக்கும் உரிமைச்சான்றிதழ்?
1) கப்பம்
2) வரி
3) தண்டனை
4) பட்டயம்
8) தொன்று தொட்டு வரும் முறை?
1) பரம்பரை
2) வழக்காறு
3) சால்பு
4) மரபு
9) செருக்குடன் கூடிய மகிழ்ச்சியை குறிக்கும்சொல் ?
1) புளகாங்கிதம்
2) உல்லாசம்
3) எக்களிப்பு
4) உவகை
10) அரும்பு, அறும்பு என்பவற்றின் பொருள் முறையே?
1) மொட்டு, கொடுமை
2) கொடுமை, மொட்டு
3) பஞ்சகாலம் ,மொட்டு
4) கொடுமை, முளை
தேர்வு