தமிழியல் வினா விடைகள்

1) தந்தை வழி மூதாதையர்?
1) பாட்டா
2) பாட்டி
3) தாத்தா
4) பிதுரர்
2) கண்வளர்தல் எனும் இணை மொழியின் எதிர்பொருள் தரும் இணைமொழி?
1) கண் மூடுதல்
2) கண் மலர்தல்
3) கண் படுதல்
4) கண் திறத்தல்
3) "நடுவூரில் நச்சு மரம் பழுத்தது போல" எனும் உவமைத் தொடரின் பொருள்?
1) நிலையாமை
2) பயனின்மை
3) பலன்பெறாப் பாதுகாப்பு
4) தீமையின் இரட்டிப்பு
4) அ. தமிழ் மொழியைப் படித்தால் அவைகளையறிந்து இவ்வுலகிற் பெரியோராக வாழலாம்.

ஆ. எம்மை அன்புடன் பெற்று வளர்த்த தாய்க்கு எவ்வளவு அன்பும் நன்றியும் உடையோமாயிருக்கின்றோம்.

இ. ஆங்கிலம், சிங்களம் முதலிய வேற்று மொழிகளைக் கற்று எங்கள் பழைய சிறந்த பழக்கவழக்கங்களை நீக்கி விட்டோம்.

ஈ. தமிழ் ஆசாரங்களையும் உயர்ந்த அறிவின்பங்களையும் உறுதி மொழிகளையும் தமிழ்த்தாய் வைத்திருக்கிறாள்.

உ. அதுபோலவே அறிவாகிய பால் தந்து பெரியோராக வளர்ந்து வருகின்றவள் அருமைத் தமிழ்த்தாய் ஆவாள். ?
1) ஆ, இ. உ, ஈ, அ
2) ஆ, உ, இ, ஈ, அ
3) இ, ஆ, ஈ, உ, அ
4) ஆ, உ, ஈ, இ, அ
5) மீட்சியில்லா துன்பம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி?
1) ஆசை வெட்கமறியாது
2) உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா
3) மரமேறி விழுந்தவனை மாடு மிதித்தது
4) சூடு கண்ட பூனை அடிப்பங்கரை நாடாது
6) பின்வருவனவற்றுள் தொகாநிலைத் தொடராய் வருவது?
1) மரியம் படம் பார்க்கச் சென்றாள்
2) மரியம் தலை வணங்கினாள்
3) மரியம் அகதிகளுக்கு உடை கொடுத்தாள்
4) மரியம் சோறு உண்டாள்
7) பின்வருவனவற்றுள் தவறானது?
1) எழுதப்பட்டது-செய்வினை
2) படித்தான்-தன்வினை
3) பாடட்டும்-வியங்கோள் வினை
4) வருத்தினான்-பிறவினை
8) உயிர் முன் உயிர் புணர்ந்து வந்துள்ள புணர்ச்சி?
1) பலாவிலை
2) ஆட்டுப்பால்
3) மலைக்கோயில்
4) வட்டப்பலகை
9) "செறியுமரண்மிகுபடைகள் உடைய" என்பதில் அரண் என்பதன் ஒத்தசொல்?
1) காவல்
2) மதில்
3) அரசர்
4) படை
10) பின்வருவனவற்றுள் அணிகள் பற்றிய தவறான கூற்று?
1) உருவகத்தில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் அமைந்திருக்கும்
2) உவமையில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் அமைந்திருக்கும்.
3) உவமையில் போல என்பது உருபாக வரும் உருவகத்தில்
4) வானவீதி, ஞானவிளக்கு என்பன உவமை அணிகள் ஆகும்.
தேர்வு