தமிழியல் வினா விடைகள்
1) யாருடைய துணையுமின்றி தானே தனியனாக நின்று காரியத்தை முடிக்கும் திறமையுடையவன்?
1) அசகாயசூரன்
2) உலோகாயுதன்
3) தேவராளன்
4) நைட்டிகன்
2) பொதுமக்களுக்காக அரங்கிலே ஆடப்படும் கூத்துவகை ?
1) பொதுவியல்
2) தெருக்கூத்து
3) அரங்கேற்றம்
4) காத்தவராயன் கூத்து
3) இருதிணைப் பொதுப்பெயர் ?
1) நோயாளி
2) தாய்
3) கன்று
4) குட்டி
4) மிகச்சிறந்த பேச்சாற்றல் உள்ளவருக்கு வழங்கப்படும் பட்டம் ?
1) சொல்லரசன்
2) நாவலர்
3) நாவுக்கரசர்
4) மணிவாசகன்
5) பிறர் அறியாமல் உதவுபவன் ?
1) தோன்றாத்துணை
2) உபகாரி
3) வள்ளல்
4) கொடையாளி
6) கோன்மை என்பதன் ஒத்த சொல் ?
1) நீதி
2) அநீதி
3) நடுவுநிலைமை
4) அரசாட்சி
7) ஐயம் என்பதன் எதிர்ச் சொல் ?
1) தெளிவு
2) விளக்கம்
3) சுருக்கம்
4) அச்சம்
8) அமிலம் என்பதன் எதிர்ச்சொல் ?
1) இரசாயனம்
2) காரம்
3) துமிலம்
4) விமலம்
9) வேறுபட்ட பொருள் தரும் சொல் ?
1) எதிர்ப்பு
2) ஆரவாரம்
3) யுத்தம்
4) ஆர்ப்பாட்டம்
10) இழப்பீட்டிற்கான உறுதிப் பத்திரம் ?
1) நட்டஈடு
2) வைப்புச்சான்றிதழ்
3) காப்புறுதி
4) ஒற்றி