தமிழியல் வினா விடைகள்

1) கடினமான காரியமாயினும் அதை மீண்டும் மீண்டும் செய்ய முயன்றால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை தரும் பழமொழி?
1) அடுத்து முயன்றாலும் ஆகுநாளே ஆகும்
2) அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
3) ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
4) பதறாத காரியம் சிதறாது
2) மரத்தை என்ற பகுபதத்தை பிரித்தால் வரும் அத்து என்பது?
1) சந்தி
2) இடைநிலை
3) சாரியை
4) விகுதி
3) மாணவரது வரவு இன்று குறைவாக காணப்படுகின்றது. மாணவரது வரவு என்பது?
1) நான்காம் வேற்றுமை
2) ஐந்தாம் வேற்றுமை
3) ஆறாம் வேற்றுமை
4) ஏழாம் வேற்றுமை
4) எண்ணித் துணிக கருமம் இங்கு துணிக என்பது?
1) முன்னிலை வினைமுற்று
2) முன்னிலை ஏவல் வினைமுற்று
3) தன்மை வினைமுற்று
4) வியங்கோள் வினைமுற்று
5) அப்பா நாளைக்கு வருவார் என்று தம்பி சொன்னான். இது?
1) தனி வாக்கியம்
2) தொடர் வாக்கியம்
3) கூட்டு வாக்கியம்
4) கலப்பு வாக்கியம்
6) எனது தாயார் விருந்தினருக்கு அறுசுவை பரிமாறினார். இங்கு அறுசுவை என்பது?
1) வினைத்தொகை
2) பண்புத்தொகை
3) உவமைத்தொகை
4) உம்மைத்தொகை
7) பின்வருவனவற்றுள் விளித்தொடராக வருவது?
1) தந்தை வந்தார்
2) மகனே வா
3) ஆடினாள் மாதவி
4) உண்டு மகிழ்ந்தார்
8) பின்வருவனவற்றுள் உயர் திணையில் உள்ள பாலுக்கே உரிய பெயர்?
1) கூத்தாடி
2) பிரதிவாதி
3) மூதாட்டி
4) விருந்தாளி
9) பின்வருவனவற்றுள் கெடுதல், தோன்றல் விகாரம் இரண்டும் இடம்பெற்ற புணர்மொழி?
1) கடற்கரை
2) குளக்கரை
3) நதிக்கரை
4) ஏரிக்கரை
10) பின்வ்ருவனவ்றுள் பொருத்தமான நிறுத்தற் குறியீடுகள் இடப்பட்டுள்ள வாக்கியம்?
1) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார்? ஏன் அழுகிறாய்?”எனத் தந்தை வினவினார்.
2) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார் ஏன் அழுகிறாய்?”எனத் தந்தை வினவினார்.
3) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார்? ஏன் அழுகிறாய்?”எனத் தந்தை வினவினார்?
4) “கண்ணா, உனக்கு அடித்தவர் யார், ஏன் அழுகிறாய்” எனத் தந்தை வினவினார்?
தேர்வு