தமிழியல் வினா விடைகள்
1) கமுகின் இளமைப் பெயர்?
1) குட்டி
2) பிள்ளை
3) நாற்று
4) வடலி
2) குயில் கூவும், மயில்?
1) அலறும்
2) ஆடும்
3) அகவும்
4) இரையும்
3) வறுமை, செல்வம் இரண்டினையும் ஒன்றாக கருதும் பற்றற்ற நிலையை உணர்த்தும் அருஞ்சொல் தொடர்?
1) குற்றங்களைந்து கனம் கொள்ளல் ஓடும்
2) செம்பொன்னும் ஒக்கவே நோக்குதல்
3) ஏழை எளியவர் வாயிலடியாமல் இருத்தல்
4) தனக்கென வாழாப் பிறருக்குரியவனாதல்
4) காதலியை காரிருளில் கானகத்தே – இங்கு சீர்தோரும் முதலில் இடம்பெறும் கா?
1) சிலேடை
2) எதுகை
3) மோனை
4) ஓசை
5) கலகம், கழகம், களகம் என்பதன் முறையே தரும் பொருள்?
1) சபை, குழப்பம், நெற்கதிர்
2) நெற்கதிர், சபை, குழப்பம்
3) குழப்பம், சபை, நெற்கதிர்
4) குழப்பம், நெற்கதிர், சபை
6) அரசன், இடம், தலைவன் எனப் பல பொருள்களை குறிக்கும் ஒரு சொல்?
1) அரி
2) பதி
3) பார்
4) கோன்
7) துன்பந்தரும் ஒன்றை சகித்து கொண்டிருத்தல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) வாலாட்டுதல்
2) வயிறு கழுவுதல்
3) பல்லைகடித்தல்
4) வாய்ப்பூட்டு போடுதல்
8) தன்மரபை அல்லது வம்சத்தை புகழ்பெற செய்தல் என்ற பொருள் தரும் மரபுத்தொடர்?
1) அடிப்படுத்தல்
2) கைகொடுத்தல்
3) ஆட்கொள்ளுதல்
4) அடிவிளக்குதல்
9) அவன் தன்னிடமிருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும் வைத்தியத்திற்காக செலவிட்டான் – கொஞ்சநஞ்சம் என்ற இணைமொழி தரும் பொருள்?
1) சிறிதளவு
2) பெருந்தொகை
3) சேகரித்ததொகை
4) கணிசமான அளவு
10) சரியான வழிகாட்டி அமையாத சமூகம் திசைமாறிப் போவதை குறிக்கும் உவமைத்தொடர்?
1) வலையிற் சிக்கிய மான் போல
2) உறியில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைதல் போல
3) மீகாமன் இல்லாத மரக்கலம் போல
4) அம்மி துணையாக ஆற்றில் இறங்கியது போல