தமிழியல் வினா விடைகள்

1) “பாரதியின் பாடல்களைக் பாமரரும் படித்து இன்புறுகின்றனர்” பாமரர் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) கவிஞர்
2) அரசர்
3) மாந்தர்
4) பண்டிதர்
2) “முல்லைக்கு தேர் ஈந்தான் வள்ளல் பாரி வள்ளல் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) ஊதாரி
2) கொடையாளி
3) உலோபி
4) ஆண்டி
3) ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த பிறர் வழங்கும் புகழுரை?
1) மதிப்புரை
2) பதிப்புரை
3) முன்னுரை
4) அணிந்துரை
4) இடையர் குலப் பெண்களைக் குறிக்கும் சொல்?
1) ஆய்ச்சியர்
2) குறத்தியர்
3) வலைச்சியார்
4) உழத்தியர்
5) கார்ட்டூன் என்பதன் நாட்டு நடப்புகளை நையாண்டியுடன் படம் வரைந்து காட்டும் ஒரு கலை. கார்ட்டூன் என்பதற்கு வழங்கப்படும் தமிழ் சொல்?
1) ஓவியம்
2) கோட்டுச்சித்திரம்
3) கேலிச்சித்திரம்
4) வரைபு
6) யானையின் இளமைப் பெயர்?
1) குருளை
2) பிள்ளை
3) பரல்
4) போதகம்
7) ஆரம், கண்ணி,தொடை என்பன குறிக்கும் சொல்?
1) மலர்
2) மாலை
3) கால்
4) வெடி
8) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்ற அருஞ் சொற்தொடரினால் குறிக்கப்படுவது?
1) வளர்ச்சி
2) தேய்வு
3) மறைவு
4) தளர்ச்சி
9) பின்வருவனவற்றுள் போர்த்துகேய மொழிச் சொல்லாக அமைவது?
1) சப்பாத்து
2) இலாச்சி
3) பட்டாளம்
4) வசூல்
10) பாண்டவர்கள் ஒருவருடகாலம் பிறர் அறியாதவாறு மாறுவேடத்தில் வாழ்ந்தனர். இவ்வாறு மறைந்து வாழ்தலை குறிக்கும் சொல்?
1) வனவாசம்
2) அஞ்ஞாதவாசம்
3) சுகவாசம்
4) தேசாந்திரம்
தேர்வு