தமிழியல் வினா விடைகள்
1) ராஜாவோடு நாயும்?
1) சென்றார்கள்
2) சென்றது
3) சென்றன
4) சென்றார்
2) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சி நாடகங்களால் பிற்காலத்தில் மக்களில் கலாசாரம்?
1) பாதிப்படைகின்றன
2) பாதிப்படையும்
3) பாதிப்படைந்தன
4) பாதிப்படைந்தது
3) குஞ்சுகள் தன் தாய்ப் பறவையைத் தேடி?
1) அலைந்தன
2) அலைந்தது
3) அழைக்கின்றது
4) திரிந்தது
4) சீதை, தபோதனர் வசிக்கும் இடமான ________ நோக்கிச் சென்றாள்?
1) வீடு
2) குடிசை
3) ஆச்சிரமம்
4) குடில்
5) மாலை அல்லது இரவில் கூடும் சந்தை ________ எனப்படும்?
1) நாளங்காடி
2) அல்லங்காடி
3) மாலைச்சந்தை
4) அந்திச்சந்தை
6) வறியவர்களுக்கும் அங்கவீனர்களுக்கும் முதியோர்களுக்கும் உண்டியும் உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம் ________ எனப்படும்?
1) ஆச்சிரமம்
2) நூதனசாலை
3) ஆதுலர்சாலை
4) புறஞ்சேரி
7) பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க (அ) உடனே கிருமி நாசினிகளை வாங்கிக் கொண்டு வருகிறார்கள். (ஆ) இதனால் நீர் மாசடைகின்றது. (இ) அங்கு பயிர்கள் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதை அவதானிக்கின்றார்கள். (ஈ) விவசாயிகள் சேனைக்கு செல்கின்றார்கள் (உ) பயிர்களுக்கு கிருமி நாசினிகளை தெளித்து விட்டு வெற்றுபோத்தல்களை அருகில் உள்ள நீர் நிலையில் வீசுகின்றார்கள்?
1) ஈ,அ,இ,உ,ஆ
2) ஈ,இ,அ,உ,ஆ
3) ஈ,உ,அ,இ,ஆ
4) அ,ஆ,இ,ஈ,உ
8) “குன்றகழ் ஆக்கித் தெவ்வர்” இங்கு தெவ்வர் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) தோழர்
2) பகைவர்
3) நண்பர்
4) உறவினர்
9) “தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார்” இங்கு பதம் என்பதன் பொருள்?
1) பாதம்
2) சொல்
3) எழுத்து
4) அருகாமை
10) “மின்னும் தார் வீமர்” இங்கு தார் என்பதன் பொருள்?
1) பாதை
2) மாலை
3) பூ
4) கொடி