தமிழியல் வினா விடைகள்
1) “திரண்டதோ கங்குல் தினகரனும் தேறும் ......”இங்கு தினகரன் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) பகலவன்
2) கடவுள்
3) சந்திரன்
4) புதன்
2) கமலன் தன் நண்பனிடம் ஆணவத்துடன் பேசினான். இங்கு ஆணவம் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) அகங்காரம்
2) கோபம்
3) ஏளனம்
4) அடக்கம்
3) அவன் மிகுந்த ஐயத்துடன் காணப்பட்டான். இங்கு ஐயம் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) பிச்சை
2) சந்தேகம்
3) நிதானம்
4) தெளிவு
4) கலைக்கு பினைப்போல கடுவனுக்கு?
1) பிடி
2) மந்தி
3) நாகு
4) பேடு
5) அறினர்களுக்கு அவை போல குண்டர்களுக்கு?
1) கும்பல்
2) கூட்டம்
3) குழாம்
4) ஆயம்
6) உவர்,சாகரம்,பரவை எனும் பல சோழர்கள் குறிக்கும் ஒரு சொல்?
1) உப்பு
2) பிராணி
3) கடல்
4) காடு
7) அலி,அழி,அளி என்பன முறையே தரும் பொருள்?
1) கடல்,சக்கரம்,கொடுத்தல்
2) ஒலி,கடல்,சிங்கம்
3) செய்,தளர்,தழை
4) திரி,தயிர்,புற்று
8) Media என்பதன் தமிழ் வடிவம்?
1) வானொலி
2) மென்பொருள்
3) ஆர்வம்
4) ஊடகம்
9) ஒருவர் வரும் வரை எதிர்பார்த்து கார்த்திருத்தல் என்பதை வெளிப்படுத்தும் அருஞ்சொற்றொடர்?
1) ஊணுறக்கம் இல்லாமல் இருத்தல்
2) நெற்றி வியர்வை நிலத்திற் சேர இருத்தல்
3) வழிமேல் விழி வைத்து இருத்தல்
4) குமரி முதல் இமயம் வரையும் இருத்தல்
10) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் இதில் இடம் பெற்றுள்ள அணி?
1) மடக்கு
2) மோனை
3) சிலேடை
4) எதுகை