தமிழியல் வினா விடைகள்
1) எழுத்து பிழையற்ற வாக்கியத்தை தெரிவு செய்க?
1) பல்கலைகழகத்தில் இருந்து வெலியேறினான்
2) பல்கலைகளகத்தில் இருந்து வெளியேறினான்
3) பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறினான்
4) பல்கலைகளகத்தில் இருந்து வெளியேறினான்
2) எழுத்து பிழையற்ற வாக்கியத்தை தெரிவு செய்க?
1) விலையாடுவதில் சிறந்தவன்
2) விளையாடுவதில் சிறந்தவன்
3) விளையாடுவதில் சிரந்தவன்
4) விலையாடுவதில் சிரந்தவன்
3) ஐம்பதாவது ஆண்டு முடிவில் எடுக்கப்படும் விழா ________ எனப்படும்?
1) பவளவிழா
2) வெள்ளிவிழா
3) வைரவவிழா
4) பொன்விழா
4) நாளை நடைபெற இருக்கும் நாடகத்தை இன்று ________ பார்த்தார்கள்?
1) அரங்கேற்றம்
2) ஒத்திகை
3) நடித்து
4) சரிபிழை
5) கடவுளை நம்புபவன் ________ எனப்படுவான்?
1) பக்திமான்
2) நாத்திகன்
3) ஆத்திகன்
4) கடவுள் நம்பி
6) அறிவு, நிறைவு,ஓர்ப்பு,கடைப்பிடிப்பு என்பன ________ எனப்படும்?
1) நாற்பயன்
2) நாற்குணம்
3) நால்வேதம்
4) நாற்சுவை
7) ஒரு நூலை வெளியிடுவோர் அந் நூலைப்பற்றி கூறும் உரை ________ எனப்படும்?
1) முன்னுரை
2) அணிந்துரை
3) பின்னுரை
4) பதிப்புரை
8) பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க (அ) தனக்கு தவப்புதல்வன் கிடைத்திருப்பதைக் கேள்விப்பட்டான் (ஆ) அதியமான் ஓர் சிறந்த மன்னன் (இ) தவப்புதல்வனைக் கண்டு மகிழ்ந்தாலும் கண்ணில் போரின் சினம் ஓயவில்லை (ஈ) போர் கோலத்தோடு வீட்டுக்கு வந்தான் (உ) அவன் போர்க்களத்தில் வெற்றி வாகைச் சூடினான்?
1) அ,ஆ,இ,ஈ,உ
2) ஆ,உ,அ,ஈ,இ
3) ஆ,இ,அ,உ,ஈ
4) ஆ,ஈ,உ,இ,அ
9) “வேழத்திற் பட்டுருவு போல பஞ்சிபாயாது......” இந்த பாடலடியில் வேழம் என்பதன் பொருள்?
1) மரம்
2) யானை
3) நரி
4) பாம்பு
10) “வேயின் திரண்ட தோள் கண்ணாய்!.....” இப்பாடலடியின் வேய் என்பதன் பொருள்?
1) அரசு
2) ஆலம்
3) மூங்கில்
4) பலா