தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் தனிவினை?
1) கை
2) வா
3) தந்தியடி
4) காட்டிக்கொடு
2) “நாளை பாடசாலை விடுமுறை தினம்” என அதிபர் கூறினார். இவ்வாக்கியத்தில்?
1) தனிவாக்கியம்
2) கூட்டு வாக்கியம்
3) ஏவல் வாக்கியம்
4) கலப்பு வாக்கியம்
3) ஆசிரியரைக் கண்ட மாணவன் தலை வணங்கினான். இவ்வாக்கியத்தில் தலை வணங்கினான் என்பது?
1) வேற்றுமைத்தொகை
2) வினைத் தொகை
3) பண்புத்தொகை
4) உவமைத் தொகை
4) “உண்டே மறுமை” என்பதில் ஏகாரம் வந்துள்ள பொருள்?
1) வினா
2) தேற்றம்
3) பிரிநிலை
4) இசைநிறை
5) கடிமாலை என்பதில் கடி என்பது குறிக்கும் பொருள்?
1) வாசனை
2) கூர்மை
3) புதுமை
4) கரிப்பு
6) நடந்தவனைக் கண்டேன் என்பதில் நடந்தவனை என்பது?
1) வினை
2) .பெயர்
3) செயல்
4) வினையாலணையும் பெயர்
7) கிளி + இறகு என்பதைப் புணர்த்தினால்?
1) கிளிறகு
2) கிளிஇறகு
3) கிளியிறகு
4) கிளியின் இறகு
8) பின்வருவனவற்றுள் பெயரெச்சமாக அமைவது?
1) ஓடி
2) ஆடிய
3) ஆடி
4) பாடி
9) நானும் நாசாவும் பாடசாலைக்கு ________?
1) வந்தான்
2) வந்தேன்
3) வந்தோம்
4) வந்தார்
10) பறவைகள் தன் இருப்பிடத்திற்கு ________?
1) சென்றது
2) சென்றன
3) சென்றவை
4) சென்றனர்