தமிழியல் வினா விடைகள்
1) “காரென்று பேர் படைத்தாய்” என்பதில் கார் என்பதன் பொருள்?
1) மேகம்
2) வானம்
3) பூமி
4) வாகனம்
2) பாரதி அச்சமில்லாமல் வாழ்ந்தார். இங்கு அச்சம் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) வெட்கம்
2) நாணம்
3) பயம்
4) துணிவு
3) உலக மக்கள் துயரில் மூழ்கினர். துயர் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) மகிழ்ச்சி
2) விழிப்பு
3) இடர்
4) சுடர்
4) எனக்கு தண்ணி வேண்டும் இங்கு தண்ணி என்பதன் திருத்தமான வடிவம்?
1) தன்னீர்
2) தண்ணீர்
3) தன்நீர்
4) தண்ணிர்
5) அரவம், பணி,கட்செவி ஆகிய பல சொற்களை குறிக்கும் ஒரு பொருள்?
1) தொழில்
2) காது
3) பாம்பு
4) அறம்
6) வெளிப்படையான பொருளில் புகழ்ந்தும் மறை பொருளில் இகழ்ந்தும் கூறுதல்?
1) இகழ்ச்சி
2) புகழ்ச்சி
3) அங்கதன்
4) அங்கதம்
7) அவன் எனக்கு கழுத்தறுத்தான். இங்கு கழுத்தறுத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள்?
1) வருந்தினான்
2) தீமை செய்தான்
3) கழுத்தை அறுத்தான்
4) வெட்டினான்
8) ராஜா முறை தவறி நடந்தான். இங்கு முறை தவறி நடத்தல் என்பதைக் குறிக்கும் மரபுத்தொடர்?
1) நாக்கை அசைத்தல்
2) வயிறு கடித்தல்
3) தலைகீழாய் நடத்தல்
4) வாலாட்டுதல்
9) முயற்சி செய்தல் பலன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தும் பழமொழி?
1) அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
2) தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை
3) தவளை தான் வாயில் கெடும்
4) ஆடத் தெரியாதவனுக்கு மேடைக் கோணலாம்
10) உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா? என்பதற்கு ஒத்தப் பழமொழி?
1) கோழி மிதித்து குஞ்சு சாகுமா?
2) ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமா?
3) கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா?
4) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு