தமிழியல் வினா விடைகள்

1) அவள் இன்சொல் பேசினாள். இங்கு இன்சொல் என்பது?
1) உவமைத்தொகை
2) பண்புத்தொகை
3) உம்மைத்தொகை
4) வினைத்தொகை
2) வந்த கமலனைக் கண்டாள். இங்கு வந்த கமலன் என்பது?
1) விளித்தொடர்
2) இடைச் சொற்றொடர்
3) பெயரெச்சத்தொடர்
4) வினைஎச்சத்தொடர்
3) பின்வருவனவற்றுள் எதிர்கால இடைநிலைகள்?
1) கின்று,த்
2) ந்த்,த்த்
3) ட்,ற்
4) ப்ப்,ப்
4) பொருட்டு, நிமித்தம்,ஆக ஆகிய சொல்லுருபுகள் பயன்படுத்தப்படு வேற்றுமை?
1) இரண்டாம் வேற்றுமை
2) நான்காம் வேற்றுமை
3) ஐந்தாம் வேற்றுமை
4) ஆறாம் வேற்றுமை
5) பின்வருவனவற்றுள் திரிதல் விகாரம் அல்லாதது?
1) கடற்கரை
2) மரவேர்
3) மட்குடம்
4) பாற்குடம்
6) பின்வருவனவற்றுள் ஆண்பாலுக்கு மட்டும் உரியது?
1) அகதி
2) ஜனாதிபதி
3) ரசிகன்
4) ரசிகர்
7) பின்வருவனவற்றுள் எதிர்மறை இடைநிலை?
1) மாட்டு
2) வரா
3) அத்து
4) ஆத்து
8) பின்வருவனவற்றுள் உடன்பாட்டு ஏவல் ஒருமை வினைமுற்று?
1) வந்தார்கள்
2) வரவில்லை
3) வரமாட்டான்
4) வந்தான்
9) பின்வருவனவற்றுள் பன்மையளவும் ஒருமையாகவும் வருவது?
1) வந்தான்
2) ஓடு
3) ஓடுங்கள்
4) பாடு
10) எமது நாட்டில் செல்வந்தர்கள் மட்டுமன்றி?
1) ஏழை இருக்கின்றனர்
2) ஏழைகளும் இருக்கின்றது
3) ஏழையும் இருக்கின்றனர்
4) ஏழைகளும் இருக்கின்றனர்
தேர்வு