தமிழியல் வினா விடைகள்
1) இராமன் சீதையுடன் இலக்குமணனும்?
1) சென்றார்கள்
2) சென்றான்
3) சென்றாள்
4) சென்றார்
2) பூனையைக் கண்ட எலிகள்?
1) ஓடியது
2) ஓடின
3) ஓடினர்
4) ஓடியவை
3) இ + மலை என்பதை புனத்தினால் தோன்றுவது?
1) இந்தமலை
2) இமலை
3) இம்மலை
4) இவ்மலை
4) தேவாரம் என்பதை பிரித்து எழுதினால்?
1) தே + ஆரம்
2) தே + வாரம்
3) தேவா + ரம்
4) தேஆ + ரம்
5) கண்மூடித்தனமாக பணத்தை வீணே செலவு செய்பவன் ________ எனப்படுவான்.?
1) உலோபி
2) கஞ்சன்
3) ஊதாரி
4) செலவாளி
6) சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்பன ________ ஆகும்?
1) ஐம்பொறி
2) ஐசுவை
3) ஐந்தறிவு
4) ஐம்புலன்
7) தனது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவில் . ________ கொண்டாடப்பட்டது.?
1) பவளவிழா
2) பொன்விழா
3) வைரவிழா
4) வெள்ளிவிழா
8) ஒரே நேரத்தில் எட்டு விடயங்களை அவதானிப்பவன் ________ எனப்படுவான்?
1) சதாவதானி
2) தசாவதானி
3) அட்டவதானி
4) திரிஞானி
9) பந்தியை அமைப்பதற்கு பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க (அ) இம்மாசால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. (ஆ) எமை சுற்றி உள்ளவை சூழல் எனப்படுகின்றது. (இ) சூழல் மாசுப்படுவதைத் தடுப்பது நமது கடமைகாகும். (ஈ) இது நீர்மாசு, நிலமாசு, வளிமாசு எனப்பிரிக்கப்படுகின்றது. (உ) இன்றைய காலப்பகுதியில் சூழல் அதிகமாகவு மாசுபடுகின்றது.?
1) இ,ஆ,உ,ஈ,அ
2) ஈ,அ,உ,ஆ,இ
3) உ,ஆ,இ,ஈ,அ
4) ஆ,உ,ஈ,அ,இ
10) “மன்னனும் மாசறக் கற்றோனும் .......” இங்கு மாசு என்பதன் பொருள்?
1) அசுத்தம்
2) சுத்தம்
3) குற்றம்
4) தெளிவு