தமிழியல் வினா விடைகள்
1) காலையும் மாலையும் சோலைக்கு சென்றாள். இதில் வந்துள்ள சொல்லணி?
1) எதுகை
2) மோனை
3) சிலேடை
4) பின்வருநிலை
2) அலை,அழை,அளை என்பதன் முறையே தரும் பொருள்?
1) புற்று,கூப்பிடு,கடல்
2) திரை,கூப்பிடு,புற்று
3) திரை,கூப்பிடு,கடல்
4) அமைதி,கூப்பிடு,புற்று
3) குழுக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது இங்கு சலசலப்பு என்பது?
1) அடுக்குத்தொடர்
2) இரட்டைக்கிளவி
3) மரபுத்தொடர்
4) இணைமொழி
4) பரி,அசுவம்,மா,புரவி ஆகியன குறிக்கும் ஒரு சொல்?
1) குதிரை
2) யானை
3) மரம்
4) மாமரம்
5) துவாரம் உண்டதால் எனும் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) கண்கலத்தல்
2) கண்டு கழித்தல்
3) கண்னறுதல்
4) கண்விடல்
6) பிறரின் துன்பத்தின் போது உதவி செய்தல் ஐம் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) அடிநகர்தல்
2) கழுத்தறுத்தல்
3) கழுத்துக் கொடுத்தல்
4) கழுத்திற் கட்டுதல்
7) எதிர்பார்த்து ஏமாந்து போவதைக் குறிக்கும் உவமைத்தொடர்?
1) அனலிடைப்பட்ட மெழுகு போல
2) இலவு காத்த கிளி போல
3) ஏட்டுசுரக்காய் போல
4) கிணற்றுத்தவளை போல
8) பயன்படுத்தாத பொருள் வீணாகப் போய்விடும் என்பதைக் குறிக்கும் பழமொழி?
1) உண்ணாச் சொத்து மண்ணாய் போகும்
2) ஆழமறியாது காலை விடாதே
3) இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை
4) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
9) அங்கே பென்னம்பெரிய மரம் உள்ளது இங்கு பென்னம்பெரிய என்பது?
1) அடுக்குத்தொடர்
2) இணைமொழி
3) அடுக்கிடுக்குத் தொடர்
4) இரட்டைகிழவி
10) பூனை மரத்தில் வேகமாக ஏறியது. இங்கு மரம் என்பது?
1) பொதுப்பெயர்
2) சிறப்புப்பெயர்
3) காலப்பெயர்
4) சினைப்பெயர்