தமிழியல் வினா விடைகள்
1) வறுமை,செல்வம் இரண்டினையும் ஒன்றாகக் கருதும் பற்றற்ற நிலையை உணர்த்தும் அரும்சொற்தொடர்?
1) குற்றம் களைந்து குணம் கொள்ளல் ஓடும்
2) செம்பொன்னும் ஒக்கவே நோக்குதல்
3) ஏழை எளியவர் வாயிலடியாமல் இருத்தல்
4) தனக்கென வாழாப் பிறருக்குரியவனாதல்
2) நீர் இங்கே இருந்தீரென நான் அறிந்திருந்தால்?
1) உடனே வருகிறேன்
2) உடனே வந்திருப்பேன்
3) உடனே வந்திருந்தேன்
4) உடனே வருவேன்
3) அந்த மரத்தில் ஒவ்வொரு?
1) பழமும் நல்லது
2) பழமும் நல்லவை
3) பழங்களும் நல்லவை
4) பழங்களும் நல்லது
4) அரசன் எவ்வழி செல்கிறானோ குடிகளும்?
1) அங்கனமே செல்வர்
2) எவ்வழியே செல்வர்
3) அவ்வழியே செல்வர்
4) அவ்வண்ணமே செல்வர்
5) பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்வரிசையை தெரிவு செய்க?
1) குறிக்கோள்,மேற்கோள்,வேண்டுகோள்,கருதுகோள்
2) திணைக்களம்,களஞ்சியம்,கொந்தளிப்பு,ஊழியம்
3) வளர்ச்சி,உயர்ச்சி,தொடர்ச்சி,தளர்ச்சி
4) சம்பளம்,கம்பழி,உளவியல்,நாளங்காடி
6) வறியவர்களுக்கும் வலது குறைந்தோருக்கும் முதியோருக்கும் உண்டியும் உறையுளும் கொடுத்து ஆதரிப்பதற்கென ________ அமைக்கப்பட்டுள்ளன.?
1) அன்னசாலைகள்
2) ஆதுலர்சாலைகள்
3) ஆச்சிரமங்கள்
4) பாசறைகள்
7) தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் ________ சூடுபிடித்துள்ளது.?
1) வின்னாபனம்
2) பிரசுரம்
3) பிரசாரம்
4) வாக்குமூலம்
8) வகுப்பறை ________ மூலம் மாணவரது பாட அடைவு மட்டத்தை அறிந்து கொள்ளலாம்?
1) ஒதுக்கீடு
2) கணிப்பீடு
3) உள்ளீடு
4) தலையீடு
9) ‘வெற்றி வேலோ உனது நயங்கள்’ நயங்கள் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) புருவங்கள்
2) கண்கள்
3) இதழ்கள்
4) பற்கள்
10) “மோட்டெருமை வாவிபுக முட்டுவரால்.....” எனும் பாடலடியில் வரும் மோட்டு என்பதன் பொருள்?
1) பெரிய
2) வலிமை
3) துணிவு
4) திறமை