தமிழியல் வினா விடைகள்

1) புறமுதுகிடல் என்ற மரபுத் தொடருக்கு சமமான பிறிதொரு மரபுத் தொடர்?
1) அடிநகர்தல்
2) அடிபடுதல்
3) அடிபிறக்கிடல்
4) அடிபிடித்தல்
2) மாணவரது வரவு இன்று குறைவாகக் காணப்படுகின்றது. மாணவரது வரவு என்பது?
1) நான்காம் வேற்றுமை
2) ஐந்தாம் வேற்றுமை
3) ஆறாம் வேற்றுமை
4) ஏழாம் வேற்றுமை
3) எண்ணித் துணிக கருமம். இங்கு துணிக என்பது?
1) முன்னிலை வினைமுற்று
2) முன்னிலை ஏவல்வினைமுற்று
3) தன்மை வினைமுற்று
4) வியங்கோள் வினைமுற்று
4) அப்பா நாளைக்கு வருவார் என்று தம்பி சொன்னான். இது?
1) தனிவாக்கியம்
2) தொடர் வாக்கியம்
3) கூட்டு வாக்கியம்
4) கலப்பு வாக்கியம்
5) எனது தாயார் விருந்தினருக்கு அறுசுவை உணவு பரிமாறினார். இங்கு அறுசுவை என்பது?
1) வினைத்தொகை
2) பண்புத்தொகை
3) உவமைத்தொகை
4) உம்மைத்தொகை
6) பின்வருவனவற்றுள் விளித்தொடராக வருவது?
1) தந்தை வந்தார்
2) மகனே வா
3) ஆடினாள் மாதவி
4) உண்டு மகிழ்ந்தான்
7) பின்வருவனவற்றுள் உயர் திணையில் ஒரு பாலுக்கே உரிய பெயர்?
1) கூத்தாடி
2) பிரதிவாதி
3) மூதாட்டி
4) விருந்தாளி
8) பின்வருவனவற்றுள் கெடுதல்,தோன்றல் விகாரம் இரண்டும் இடம்பெற்ற புணர்மொழி?
1) கடற்கரை
2) குளக்கரை
3) நதிக்கரை
4) ஏரிக்கரை
9) செம்மொழியாம் தமிழ்மொழி தமிழ் மாந்தர்களால் மாத்திரமின்றி?
1) பிறரும் விரும்புகின்றார்கள்
2) பிறர் விரும்புகின்றார்கள்
3) பிறரால் விரும்பப்படுகின்றது
4) பிறராலும் விரும்பப்படுகின்றது.
10) நீயும் நானும் அவனும் பல விடயங்களில்?
1) ஒத்திருக்கின்றனர்
2) ஒத்திருக்கின்றீர்
3) ஒத்திருக்கிறோம்
4) ஒத்திருக்கின்றீர்கள்
தேர்வு