தமிழியல் வினா விடைகள்
1) மரவேர் என்பது?
1) தோன்றல் விகாரம்
2) திரிதல் விகாரம்
3) கெடுதல் விகாரம்
4) இயல்புப் புணர்ச்சி
2) இடையர்குல பெண்களைக் குறிக்கும் சொல்?
1) ஆய்ச்சியர்
2) குறத்தியர்
3) வலைச்சியர்
4) உழத்தியர்
3) கார்ட்டூன் என்பது நாட்டு நடப்புகளை நையாண்டியுடன் படம் வரைந்து காட்டும் ஒரு கலை என்பதற்கு வழங்கப்படும் தமிழ் சொல்?
1) ஓவியம்
2) கோட்டுச் சித்திரம்
3) கேலிச்சித்திரம்
4) வரைபு
4) யானையின் இளமையின் பெயர்?
1) குருளை
2) பிள்ளை
3) பரல்
4) போதகம்
5) பள்ளி சொல்லும், கோழி?
1) கத்தும்
2) கரையும்
3) கேரும்
4) அகவும்
6) ஆரம்,கன்னி,தொடை என்பன குறிக்கும் சொல்?
1) மலர்
2) மாலை
3) கால்
4) வெடி
7) நானொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்ற அரும் சொற்தொடரினால் குறிப்பது?
1) வளர்ச்சி
2) தேய்வு
3) மறைவு
4) தளர்ச்சி
8) பின்வருவனவற்றுள் போர்த்துக்கேய மொழிச் சொல்லாக அமைவது?
1) சப்பாத்து
2) இலாச்சி
3) பட்டாளம்
4) வசூல்
9) அரண்மனையில் மகளிர் தங்குவதற்குரிய தனி இடம்?
1) நிலாமுற்றம்
2) ஓலக்கம்
3) உப்பரிகை
4) அந்தப்புரம்
10) பாண்டவர்கள் ஒரு வருட காலம் பிறர் அறியாதவாறு மாறுவேடத்தில் வாழ்ந்தனர். இவ்வாறு மறைந்து வாழ்தலைக் குறிக்கும் சொல்?
1) வனவாசம்
2) அஞ்ஞதவாசம்
3) சுகவாசம்
4) தேசாந்திரம்