தமிழியல் வினா விடைகள்

1) பாடசாலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பழைய மாணவர் ________ நல்குவது இன்றியமையாதது ஆகும்?
1) கூட்டுறவு
2) ஒத்துழைப்பு
3) ஒத்திவைப்பு
4) நன்மதிப்பு
2) ஆறுமுகநாவலர் இலக்கண நூல்கள் பலவற்றைத் துறைபோகக் கற்றார். இங்கு துறைபோதல் என்ற மரபுத் தொடர் தரும் கருத்து?
1) ஐயந்திரியறக் கற்றல்
2) பிறநாட்டில் கற்றல்
3) மேலோட்டமாகக் கற்றல்
4) குருவிடங்கற்றல்
3) அண்ணளவானது என்ற கருத்தைத் தரும் தொடர்?
1) கிட்டத்தட்ட
2) திட்டவட்ட்டமான
3) அரைகுறை
4) கையுங்கணக்கும்
4) “சேற்றில் புதைந்த யானையைக் காகமு கொத்தும்” என்ற பழமொழி தரும் உட்கருத்து?
1) யானைக்கும் அடி சறுக்கும்
2) தந்திரமுள்ள காக்கையால் வலிமையுடைய யானையும் வெல்லமுடியும்
3) ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்
4) உயர்ந்த நிலையிலிருந்த ஒருவர் தன்னிலை மிக எளியரும் அவரைத் துன்புறுத்துவர்
5) தமக்கு வேண்டிய பொருள் அண்மையிலே இருக்க அதனை எங்கெங்கோ தேடி அலைதல் என்பதை விளக்கப் பயன்படுத்தப்படும் உவமைத்தொடர்?
1) ஏவற்பேய் கூரையை பிடுங்கியது போல
2) உட்சுவர் இருக்கப் புறச்சுவர் கோலம் செய்வது போல
3) உறியில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைதல் போல
4) அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல
6) தமிழ் நெடுங்கணக்கு ஒழுங்கில் அமையாத சொற்கூட்டம்?
1) இலை,ஈட்டி,உறி,ஊதல்
2) நிலம்,நீலம்,நுங்கு,நூபுரம்
3) கரகம்,சட்டி,தட்டி,ஞமலி
4) தங்கம்,பட்டம்,மரம்,வண்ணம்
7) பின்வருவனவற்றுள் கூட்டுப் பெயராக வருவது?
1) கமலம்
2) நீரேரி
3) கவிதை
4) மடந்தை
8) சிறுவன் சாரைப்பாம்பைக் கண்டு நடுங்கினான். சாரைப்பாம்பு என்பது?
1) உம்மைத் தொகை
2) உவமைத்தொகை
3) பண்புத் தொகை
4) இரு பெயரொட்டுப் தொகை
9) கால்தவறி விழுந்தவனை கைகொடுத்து தூக்கினேன். விழுந்தவனை என்பது?
1) வினை எச்சம்
2) தொழிற் பெயர்
3) வினையாலணையும் பெயர்
4) குறிப்பு வினை முற்று
10) என்னுடைய ஆசிரியர் வந்தார். இங்கு என்னுடைய என்பது?
1) இரண்டாம் வேற்றுமை
2) மூன்றாம் வேற்றுமை
3) ஐந்தாம் வேற்றுமை
4) ஆறாம் வேற்றுமை
தேர்வு