தமிழியல் வினா விடைகள்
1) பந்தியை அமைப்பதற்கு மிக பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க (அ) அது பெரிய விருட்சமாகியது. (ஆ) பாலன் மரம் ஒன்று வெட்ட நினைத்தான் (இ) மரத்தை வெட்டினான் (ஈ) முதலில் மரக்கன்றொன்றை கொண்டு வந்தான் (உ) அதனருகே கன்றோன்றை நாட்டினான்?
1) ஆ,ஈ,உ,அ,இ
2) ஆ,இ,ஈ,உ,அ
3) ஆ,ஈ,இ,உ,அ
4) ஈ,உ,ஆ,இ,அ
2) பின்வருவனவற்றுள் வாக்கியம் அல்லாதது எது?
1) யாது செய்வோம்
2) பொய் பேசாதீர்
3) பரமனைப் பாடுங்கள்
4) கட்டறுந்த மாடு
3) பின்வருவனவற்றுள் கூட்டு வாக்கியத்திற்கு உதாரணமாக அமைவது?
1) மேகம் கலைந்தது; மழை பெய்தது; வெள்ளம் பாய்ந்தது
2) மயில் அழகாக ஆடியது
3) பாரதி ஒரு மகாகவி என்பது ஆய்வாளர் முடிவாகும்
4) கண்ணன் குழல் ஊதினான்
4) பூங்குழல் இனிமையாகப் பாடினாள். இங்கு பூங்குழல் என்பது?
1) அன்மொழித்தொகை
2) வேற்றுமைத்தொகை
3) உம்மைத் தொகை
4) உவமைத் தொகை
5) பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற தொகுதியை தெரிவு செய்க?
1) கூட்டுப்பெயர் : வானொலி,குதிரைப்படை,கண்காட்சி
2) ஆக்கப்பெயர் : கொடையளி,புத்திசாலி,முயற்சி
3) கூட்டுவினை : காட்டிக்கொடு,தந்தியடி,சுட்டிக்காட்டு
4) தெரிநிலை வினைமுற்று :செய்தேன்,படித்தானை,படித்தான்
6) இறந்தான் என்பதை இறைவனடி எய்தினான் எனக் கூறும் வழக்கு?
1) குழூஉக்குறி
2) இடக்கரடக்கல்
3) மங்கலம்
4) மரூஉ
7) செயற்படுபொருள் குன்றிய வகை வாக்கியத்திற்கு உதாரணம்?
1) குமரன் நடந்து சென்றான்
2) குமரன் இனிமையாக பாடினான்
3) குமரன் பாட்டு பாடினான்
4) குமரன் படித்தான்
8) மிதிலை நகர் வாயில் கொடிகள் இராம இலக்குமனரை வாருங்கள் என அழைப்பன போல் அசைந்தன. இங்கு கையாளப்பட்டுள்ள அணி?
1) உவமை
2) உருவகம்
3) தற்குறிபேற்றம்
4) உயர்வுநவிற்சி
9) போற்றினான் என்பதன் பகுப்பு?
1) போற்ற+இன்+ஆன்
2) போற்றி+இன்+ஆன்
3) போற்று+இன்+ஆன்
4) போற்+றின்+ஆன்
10) மன்னனிற் கற்றோன் சிறந்தவன். இங்கு நன்னன் என்ற பெயர் சொல்?
1) நான்காம் வேற்றுமை உருபேற்றுள்ளது
2) ஐந்தாம் வேற்றுமை உருபேற்றுள்ளது
3) ஆறாம் வேற்றுமை உருபேற்றுள்ளது
4) ஏழாம் வேற்றுமை உருபேற்றுள்ளது