தமிழியல் வினா விடைகள்
1) துன்பம், கடல், ஒலி ஆகிய பலபொருள் தரும் ஒரு சொல்?
1) பந்தம்
2) மஞ்சு
3) களி
4) இதழ்
2) இங்கே வா சொல்றன். இங்கு சொல்றன் என்பதன் திருத்தமான வடிவம்?
1) சொல்கிறேன்
2) சொல்றேன்
3) சொல்லுறேன்
4) சொல்கின்றன்
3) நல்ல வளர்ச்சி என்பதனை குறிக்கும் அருஞ் சொற்றொடர்?
1) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
2) ஓடும் செம்பொனும்
3) ஒக்கவே நோக்கும் நுண்மான் நுழைபுலம்
4) துள்ளி திரிகின்ற காலம்
4) “காணி நிலம் வேண்டும் – பராசக்தி” எனும் பாடலை பாடியவர்?
1) பாரதிதாசன்
2) வைரமுத்து
3) பாரதி
4) வாலி
5) சீனாவிலுள்ள மாளிகைகள் பொன்னினால் வேயப்பட்டன. இங்கு இடம் பெற்றுள்ள அணி?
1) உவமை
2) உருவகம்
3) தற்குறிப்பேற்றம்
4) உயர்வுநவிற்சி
6) அவன் ஒற்றைக்காலில் நின்றான். இங்கு ஒற்றைக் காலில் நின்றான் எனும் மரபுத்தொடர் குறிப்பது?
1) தகாத செயல்
2) மறை பொருள்
3) விடாப்பிடி
4) பதற்றம்
7) போட்டியில் வெற்றி பெற பெருமுயற்சி செய்தான். இங்கு பெருமுயற்சி செய்தல் என்பதை குறிக்கும் மரபுத்தொடர்?
1) கசகரணம் போடுதல்
2) இலைமறை காய்
3) ஆலம் பார்த்தல்
4) கல்லில் நாருரித்தல்
8) இரண்டு பிள்ளைகளும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள். என்பதை விளக்கும் உவமைத்தொடர்?
1) சித்திர பதுமை போல
2) ஓரச்சில் உருக்கிய வார்த்தாற் போல
3) சேற்றிலே முளைத்த செந்தாமரை போல
4) புளியம் பழமும் ஓடும் போல
9) “ஆலையில்ல ஊருக்கு இலுப்பைப்பூ கர்க்கரை” எனும் பழமொழி உணர்த்தும் கருத்து?
1) உத்தம நட்பு
2) அற்பனுக்கு மதிப்பு
3) வஞ்சகம்
4) அறியாமை
10) தாய் எப்போதுமே குழந்தை மீது அன்பு கொண்டவள் என்பதனை விளக்கும் பழமொழி?
1) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
2) கடுகு சிறிதானாலும் காரம் பெரிது
3) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
4) காக்கைக்கு தான் குஞ்சு பொன் குஞ்சு