தமிழியல் வினா விடைகள்
1) இளங்கன்று பயமறியாது எனும் பழமொழி கூறும் கருத்து?
1) திருப்தியற்ற மனம்
2) வாலிபத்துணிவு
3) கன்றுக் குட்டி பயப்பிடது
4) ஆராய்ந்து செய்
2) இணைபிரியாத நண்பர்கள் எதையும் உணர்த்த பொருத்தமாக அமையும் உவமைத்தொடர்?
1) கிணற்றுத் தவளை போல
2) வெயிலும் மழையும் போல
3) நகமும் சதையும் போல
4) கீரியும் பாம்பும் போல
3) பின்வருவனவற்றுள் பெயராகவும் வினையாகவும் வரும் சொல்?
1) காடு
2) தேடு
3) கூடு
4) கோடு
4) கண்ணன் ஓடியவனைத் துரத்தினான். இங்கு ஓடியவன் என்பது?
1) பெயர்ச்சொல்
2) அடைமொழி
3) அறுவகைப்பெயர்
4) வினையாலணையும் பெயர்
5) சிறிய முயல் அந்த புதருக்குள் பாய்ந்து ஒழிந்தது. இவ்வாக்கியத்தின் பெயரடை?
1) சிறிய,அந்த
2) அந்த,பாய்ந்த
3) சிறிய
4) பாய்ந்த
6) பின்வரும் வேற்றுமை உறுப்புகளுள் தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள வேற்றுமை உருபு?
1) ஒடு
2) ஆன்
3) ஆது
4) ஆல்
7) வாள் + படை என்பதை புணர்த்தினால் தோன்றுவது?
1) வாட்படை
2) வாற்படை
3) வாள்படை
4) வாள்ப்படை
8) கொடுத்தான் என்ற சொல்லின் விகுதி?
1) கொடு
2) த்
3) த்த்
4) ஆன்
9) செய்து, செய், செயின் என்பன?
1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) பெயரெச்சம்
4) வினையெச்சம்
10) சார்பெழுத்துக்களின் எண்ணிக்கை?
1) 4
2) 8
3) 9
4) 10