தமிழியல் வினா விடைகள்
1) தமிழ் அகராதியில் அதிகமாக பயன்படுத்தாத எழுத்து வரிசை?
1) ங
2) ஞ
3) வ
4) ச
2) பின்வருவனவற்றுள் எழுவாய் தொக்கி நிற்கும் வாக்கியம்?
1) லுணுகலையில் பெறும் மழை பெய்தது
2) துள்ளி ஓடிய மானைக் கண்டேன்
3) சூடு கண்ட அடுப்பங்கரை நாடாது
4) நீ முதலில் ஓடு
3) செயலாளரால் சென்ற வார கூட்டறிக்கை?
1) வாசிக்கப்பட்டது
2) வாசித்தான்
3) முன்வைத்தான்
4) வாசித்தார்
4) காற்று வேகமாக வீசியதால் மரங்கள்?
1) முறிந்தது
2) முறிந்தன
3) முறியும்
4) முறிகின்றது
5) நிலவைக் காட்டி தாய்மார்கள் பிள்ளைக்கு உணவு?
1) ஊட்டினார்
2) ஊட்டியது
3) ஊட்டும்
4) ஊட்டினர்
6) குற்றம் செய்து தலைமறைவாகிய ஒருவனுக்கு நீதிமன்றத்தால் ________ . விதிக்கப்பட்டது.?
1) அழைப்பாணை
2) பிடியாணை
3) ஆணை
4) அழைப்பு
7) புதிதாக செய்த கப்பலை ஈராக் இன்று ________ பார்த்தது.?
1) தேரோட்டம்
2) அரங்கேற்றம்
3) வெள்ளோட்டம்
4) ஒத்திகை
8) ஜனாதிபதி தேர்தல் தெரிவில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக எதிர்க் கட்சியினரால் உச்ச நீதிமன்றத்திற்கு ________ செய்யப்பட்டது.?
1) குறைபாடு
2) கருத்து பரிமாற்றம்
3) பிடிவிராந்து
4) மனுதாக்கல்
9) அகரவரிசை ஒழுங்கில் அமைந்த சொற்கள்?
1) கானகம், தும்மல், சுகம், லட்டு
2) அன்பு, குற்றம், பாடல், சாலை
3) சிட்டு, தானம், புகழ், மாயை
4) ஆடு, தாய், ஞானி, நாளை
10) மிக பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க (அ) முக்கியமான கருத்துக்களை தெரிவு செய்தல் (ஆ) சுருக்கி எழுதல் (இ) கருத்துக்களை ஒழுங்குப்படுத்தல் (ஈ) உரைநடையத் தெளிவாக வாசித்தல் (உ) குறிப்பெடுத்தல்?
1) ஈ,இ,உ,அ,ஆ
2) ஈ,உ,இ,அ,ஆ
3) ஈ,இ,அ,உ,ஆ
4) ஈ,அ,உ,இ,ஆ