தமிழியல் வினா விடைகள்

1) அரண்மனையின் மேல் மட்டம் ________ எனப்படும்?
1) உப்பரிகை
2) அந்தப்புரம்
3) முன்றில்
4) மாடி
2) பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க (அ) கைகேயியின் ஆசைக்கு பரதன் இணங்கவில்லை (ஆ) அதன்படி இராமன் காடாள சென்றான் (இ) கூனியின் வஞ்சக வார்த்தையை கையேயி கேட்டாள் (ஈ) இராமனை அழைத்துவர பரதன் காட்டிற்கு சென்றான் (உ) தசரதனிடம் சென்று வரம் பெற்றாள்?
1) இ,அ,ஆ,உ,ஈ
2) ஈ,ஆ.உ.அ.இ
3) இ.உ.ஆ.அ.ஈ
4) இ.ஆ.உ.அ.ஈ
3) “கோழியர் கோக் கிள்ளி களிறு” இப்பாடலடியின் களிறு என்பதன் பொருள்?
1) புலி
2) யானை
3) சிங்கம்
4) கரடி
4) “தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை” என்பதில் தானம் என்பதன் பொருள்?
1) கொடை
2) உலோபி
3) அன்னம்
4) கெடுதல்
5) “வடு அன்று வேந்தன் தொழில்” இங்கு வடு என்பதன் ஒத்த கருத்து சொல்?
1) தோல்வி
2) உண்மை
3) பொய்
4) பழி
6) தான் தாய் சகுனம் பார்ப்பதை ராணி விரும்பவில்லை. இங்கு சகுனம் என்பதன் எதிர்ப்பொருள் சொல்?
1) சிகுனம்
2) அபசகுனம்
3) கெட்டது
4) பிழையானது
7) அவன் சில விடயங்களில் தான் பெற்றோருக்கு ஒத்துழைப்பான். இங்கு ஒத்துழைப்பு என்பதன் எதிர்கருத்து?
1) அடிமை
2) பிரதிகூலம்
3) ஒதுங்கு
4) பதுங்கு
8) கமுகுக்கு கன்று போல அணிலுக்கு?
1) குருளை
2) குட்டி
3) பரல்
4) மேரி
9) சோளம் என்பதற்கு மணி போல தாமரைக்கு?
1) முத்து
2) மணி
3) விதை
4) பொகுட்டு
10) அவன் சுமார் 5 வருடங்களாக வேலை செய்கின்றான். இங்கு சுமார் என்பதற்கு உரியமொழி?
1) பாரசீகம்
2) மராட்டி
3) பாளி
4) அரபு
தேர்வு