தமிழியல் வினா விடைகள்
1) திணைக்கு அரிசி போல பயறுக்கு?
1) சுளை
2) அரிசி
3) பருப்பு
4) முத்து
2) உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவதே. இங்கு உள்ளக்கமலம் என்பது?
1) உருவகம்
2) உவமை
3) சிலேடை
4) எதுகை
3) கரை,கறை எனும் சொற்கள் முறையே பொருள் தருவது.?
1) எல்லை,யானை
2) தேய்,சுற்றம்
3) தேய்,விஷம்
4) மிளகு,கருப்பு
4) என் மனம் படபடத்தது. இங்கு படபடத்தது என்பது?
1) அடுக்குமொழி
2) இரட்டைக்கிளவி
3) இணைமொழி
4) அடுக்கிடுக்குத்தொடர்
5) அலர்,வீ எனும் சொற்கள் தரும் பொருள்?
1) பூ
2) மரம்
3) காய்
4) கனி
6) அரசன், சபாமண்டபத்தில் அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ இருக்கும் இருக்கை?
1) நாற்காலி
2) சிம்மாசனம்
3) முக்காலி
4) ஓலக்கம்
7) மலையும் மலை சார்ந்த இடமும்?
1) முல்லை
2) நெய்தல்
3) குறிஞ்சி
4) மருதம்
8) வாழை மரம் என்பது?
1) காரணப்பெயர்
2) சிறப்புப்பெயர்
3) இடுக்குறிப்பெயர்
4) இடப்பெயர்
9) புதூர் என்பது?
1) மரூஉ
2) இலக்கணமுடையது
3) மங்கலம்
4) குழுஉக்குறி
10) பின்வருவனவற்றுள் பெயர்ப்பகாப்பதம்?
1) ஓடு
2) ஆல்
3) தவ
4) வளி