தமிழியல் வினா விடைகள்
1) வயிறு வாய்த்தல் என்ற மரபுத் தொடரின் கருத்து?
1) வயிற்று வழி
2) வயிறு வளர்தல்
3) மகப்பேறு
4) வயிறு வீங்குதல்
2) முதியவர் முதலைக் கண்ணீர் விட்டார். இங்கு முதலைக் கண்ணீர் எனும் மரபுத்தொடர் குறிப்பது?
1) கத்தி அழுதல்
2) பொய் இரக்கம்
3) பொய் சொல்லுதல்
4) மெதுவாக அழுதல்
3) எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு என்ற பழமொழிக்கு பொருத்தமான இன்னுமொரு பழமொழி?
1) பாத்திரம் அறிந்து பிச்சை எடு
2) குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்
3) செல்வமென்பது சிந்தனையின் நிறைவே
4) பேராசை பெருதந்திரம்
4) எதனையும் முன் கூட்டியே செய்ய வேண்டும் எனும் கருத்தைத் தரும் பழமொழி?
1) வெள்ளம் வரும் முன் அணைகட்ட வேண்டும்
2) வேலைக்கு கள்ளிக்கு பிள்ளை சாட்டு
3) பொறுத்தார் அரசாள்வார்
4) புத்திமான் பலவான்
5) எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை என்ற கருத்தை தரும் உவமைத் தொடர்?
1) தூண்டிலில் அகப்பட்ட மீன் போல
2) சிறகற்ற பறவைப் போல
3) மடை திறந்த வெள்ளம் போல
4) மதில் மேல் பூனை போல
6) ஓடிய சிறுவன் என்பது?
1) வினைத்தொடர்
2) பெயரெச்சத் தொடர்
3) விளித்தொடர்
4) வினையெச்சத்தொடர்
7) மணிமாலை ஆடினால். இது?
1) வினைத்தொகை
2) உவமைத்தொகை
3) அன்மொழித்தொகை
4) உம்மைத்தொகை
8) வாய்க்கால் வழியாக நீர் வேகமாக சென்றது. இவ் வாக்கியத்தில் வாய்க்கால் என்பது?
1) இலக்கணப்போலி
2) இலக்கணமுடையது
3) மரூஉ
4) இடக்கரடக்கல்
9) அவளுக்கு நிறைய மொழி பேச முடியும். இங்கு ‘கு’ உருபு உணர்த்தும் பொருள்?
1) காலக் குறிப்பு
2) அனுபவப்பேறு
3) வீதாசாரம்
4) வினையடை ஆக்கம்
10) அவள் ஒரு சிறந்த படைப்பாளி. இங்கு படைப்பாளி என்பது?
1) பொருட்பெயர்
2) ஆக்கப்பெயர்
3) கூட்டுப்பெயர்
4) இடப்பெயர்