தமிழியல் வினா விடைகள்
1) களிறுக்கு பிடி போல மயிலுக்கு?
1) பெட்டை
2) மந்தி
3) அளகு
4) அலகு
2) ஆடு மந்தை சனம்?
1) தொகுதி
2) வரிசை
3) திரள்
4) நிரை
3) கடல்,மலை,மேகம் எனும் சொற்கள் குறிக்கும் அர்த்தங்கள் முறையே?
1) அழி,மறை,மாரி
2) வேலை,பருவதம்,தொடை
3) சாகரம்,குன்று,அலர்
4) சாகரம்,மாரி,கார்
4) பரவை,பறவை ஆகிய சொற்கள் தரும் கருத்துக்கள் முறையே?
1) கடல்,பட்சி
2) புல்,பட்சி
3) புள்,பட்சி
4) பட்சி,கடல்
5) ஓடுமா தங்கமே உருளுமா தங்கமே இங்கு மாதங்கம் என்பது?
1) உவமை
2) உருவகம்
3) சிலேடை
4) எதுகை
6) தம்பி பீரோ வாங்க கடைக்கு சென்றான். இங்கு பீரோ என்பது?
1) அரபு மொழி
2) பாளி மொழி
3) பிரான்சிய மொழி
4) ஆங்கில மொழி
7) பொன்னை உரைத்து அதன் தரத்தை அறிந்து கொள்வதற்கு உபயோகிக்கப்படும் ஒரு வகை கல்?
1) உரைகல்
2) காவற்கல்
3) கருங்கல்
4) மண்கல்
8) பாவக்காய் எனக்கு வேண்டாம் என தம்பி கூறினான். இவ்வாக்கியத்தில் பாவக்காய் என்பதன் திருத்திய வடிவம்?
1) பாகள் காய்
2) பாககாய்
3) பாகற்காய்
4) பாகட்காய்
9) வசைகவி பாடுவதில் வல்லவர்?
1) காளமேகப் புலவர்
2) பாரதியார்
3) பாரதிதாசன்
4) வைரமுத்து
10) தாயை இழந்த மகள் கத்திக் கதறி அழுதான். இங்கு கத்திக்கதறி என்பது?
1) அடுக்குமொழி
2) இரட்டைகிழவி
3) அடுக்கிடுக்குத்தொடர்
4) இணைமொழி