தமிழியல் வினா விடைகள்

1) ஆடி வந்தவனைக் கண்டேன். இங்கு ஆடி என்பது?
1) வினை
2) பெயர்
3) பெயரெச்சம்
4) வினையெச்சம்
2) நல்ல பாம்பு ராஜாவை கொத்தியது. இங்கு நல்ல பாம்பு என்பது?
1) இலக்கணப் போலி
2) மங்கலம்
3) அமங்கலம்
4) மருவு
3) தம்பி பானையை உருட்டினான். இங்கு உருட்டினான் என்பது?
1) பிறவினை
2) தன்வினை
3) எதிர்மறை வினை
4) செய்வினை
4) பின்வருவனவற்றுள் சுட்டுசொல் அல்லாதது?
1) அந்த
2) அவன்
3) உவன்
4) அம்மா
5) மரக்குற்றியோ மனிதனோ அங்கே ________?
1) தோன்றுவது
2) தோன்றுபவள்
3) தோன்றுகின்ற உரு
4) தோன்றுபவர்
6) நானும் நீயும் அவனும் ________?
1) ஓடுவோம்
2) ஓடினான்
3) ஓடினேன்
4) ஓடினாய்
7) தம்பியும் தங்கையும் ________?
1) வந்தார்
2) வந்தான்
3) வந்தார்கள்
4) வந்தாள்
8) பின்வருவனவற்றுள் எழுத்து பிழைகளற்ற வாக்கியங்களைத் தெரிவு செய்க?
1) வலிமண்டல தகவள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
2) வளிமண்டல தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
3) வலி மண்டல தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
4) வளி மண்டல தகவல்களைப் பெற்றுக்கொல்லலாம்.
9) பின்வருவனவற்றுள் எழுத்து பிழைகளற்ற வாக்கியங்களைத் தெரிவு செய்க?
1) மரண தண்டனை வழங்கப்பட்டது.
2) மரன தன்டனை வழங்கப்பட்டது.
3) மரண தண்டனை வளங்கப்பட்டது.
4) மரன தண்டனை வளங்கப்பட்டது.
10) மன்னாசைக் கொண்டு ஒரு மன்னன் மற்றொரு மன்னன் மீது ________ போர் தொடுத்தான்.?
1) கொரில்லாப்
2) வஞ்சிப்
3) நேரடித்
4) மறைமுகப்
தேர்வு