தமிழியல் வினா விடைகள்

1) தான் பிறந்த நாட்டை நேசிப்பவன் . ________ எனப்படுவான்.?
1) அபிமானி
2) பற்றாளன்
3) நேசன்
4) தேசாபிமானி
2) போர்க்களத்தில் படை வகுப்பின் இறுதியில் ________ நிற்கும்?
1) கூலிப்படை
2) ஓம்படை
3) கூளைப்படை
4) நாற்படை
3) இறைவனை ஆண்டானாகவும் தன்னை அடியானாகவும் கருதி வழிபடும் முறை ________ ஆகும்.?
1) சகமார்க்கம்
2) சன்மார்க்கம்
3) சற்புத்திரமார்க்கம்
4) தாசமார்க்கம்
4) பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க (அ) அனைத்துமே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. (ஆ) அவை நீரில் வாழ்வதற்கேற்ற உடலமைப்பைக் கொண்டுள்ளன. (இ) ஆனால் நீரிலேயே அவை அதிக காலம் வாழ்கின்றன. (ஈ) எனவே முதலைகள் ஒரு பாலுட்டி விலங்கல்ல. (உ) முதலைகள் ஊர்வன இனமாகும்.?
1) உ,ஆ,இ,அ,ஈ
2) உ,இ,ஆ,அ,ஈ
3) உ,அ,இ,ஆ,ஈ
4) ஈ,உ,ஆ,இ,அ
5) “பூணுக்கு அழகளிக்கும் பொற்றொடி” இங்கு பூண் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) இடை
2) ஆபரணம்
3) உடை
4) கயிறு
6) “மாட்டின் பிணிக்கு மருந்தாயொரு சூடு” இங்கு பிணி என்பதன் பொருள்?
1) கால்
2) பசி
3) வால்
4) நோய்
7) “தானம் தவம் உயர்ச்சி தாளண்மை” இங்கு தானம் என்பதன் பொருள்?
1) கொடை
2) கடன்
3) இரக்கம்
4) .ஊதாரி
8) மன்னனின் கொடுங்கோல் ஆட்சியினால் மக்கள் பெரிதும் வேதனைபட்டனர். இவ்வாக்கியத்தில் கொடுங்கோல் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) கொடாகோல்
2) செங்கோல்
3) நன்கோல்
4) கொடுமை
9) அவன் அனைவரிடம் கேன்மையாக இருப்பான். இங்கு கேண்மை என்பதன் எதிர்ப்பதம்?
1) நட்பு
2) நன்மை
3) கேளாமை
4) பகைமை
10) Super Market என்பதன் தமிழ் வடிவம்?
1) சிறப்பங்காடி
2) நல்லங்காடி
3) இரவுசந்தை
4) பகல்சந்தை
தேர்வு