தமிழியல் வினா விடைகள்

1) நீ வெளிப்படையாக கேட்பது எனக்கு பிடித்துள்ளது. இங்கு வெளிப்படையாக கேட்டல் என்ற கருத்தை தரும் மரபுத்தொடர்?
1) .செவியறிவுறுத்தல்
2) வாய் விடுதல்
3) வாய் மூத்தல்
4) முகமாதல்
2) ‘சிறு விடயங்களில் கவனமும் பெரிய விடயங்களில் கவனயீனமும்’ என்ற கருத்தைத் தரும் பழமொழி?
1) கிட்டாதாயின் வெட்டென மாற
2) ஆனைக்கும் அடி சறுக்கும்
3) அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமும்
4) ஊசி போகுமிடம் பார்ப்பார். உலக்கை போகுமிடம் பாரார்.
3) “காகம் திட்டி மாடி சாகாது” என்ற பழமொழி தரும் கருத்து?
1) காலம் எதற்காகவும் காத்திருக்காது
2) ஏழ்மையிலும் வலிமை வேண்டும்
3) வீண்பழிக்கு அஞ்சகூடாது
4) காகம் திட்டினாலும் மாடு இறக்காது
4) ஒரு பிரச்சினையை மேலும் தூண்டிவிடுவதாக அமையும் செயற்பாட்டை விளக்கும் உவமைத்தொடர்?
1) எரிகின்ற நெருப்பிற் எண்ணெய் ஊற்றியது போல
2) புயலில் அகப்பட்ட கலம் போல
3) சிவ பூசையில் கரடி புகுந்தது போல
4) திரிசங்கு சுவர்க்கம் போல
5) எக்காலம் என்பதனைப் பிரித்து எழுதினால்?
1) எக்+காலம்
2) எ+காலம்
3) எ+க்காலம்
4) எக்+ஆலம்
6) குருவி மரத்தில் இருக்கிறது. இங்க இல் உருபு உணர்த்தும் பொருள்?
1) இடப்பொருள்
2) நீக்கல் பொருள்
3) எல்லைப் பொருள்
4) ஏதுப்பொருள்
7) பின்வரும் சொற்களுள் கடைப்போலி?
1) நிலன்
2) பழமை
3) அவ்வை
4) மயல்
8) நாடு கடந்து வந்தான். இங்கு நாடு கடந்து என்பது?
1) உவமைத் தொகை
2) உம்மைத் தொகை
3) வேற்றுமைத் தொகை
4) வினைத் தொகை
9) கடலலை வேகமாக வந்தது. இங்கு கடலலை என்பது?
1) ஆக்கப் பெயர்
2) கூட்டுப் பெயர்
3) காலப் பெயர்
4) வினையாலணையும் பெயர்
10) பின்வருவனவற்றுள் எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று?
1) ஓடுங்கள்
2) பாடாதீர்கள்
3) ஓடு
4) படிக்காதே
தேர்வு