தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் எழுத்துப் பிழையற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.?
1) பாரதியாரின் வாக்கிற்கிணங்க தமிழ் மொழி சிரப்புற்று வளர்ந்தது.
2) பாரதியாரின் வாக்கிற்கினங்க தமிழ் மொழி சிறப்புற்று வழர்ந்தது.
3) பாரதியாரின் வாக்கிற்கிணங்க தமிழ் மொழி சிறப்புற்று வளந்தது.
4) பாரதியாரின் வாக்கிற்கிணங்க தமிழ் மொழி சிறப்புற்று வளர்ந்தது.
2) பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது ________ நிறைவேற்றப்பட்டது.?
1) உடன்படிக்கை
2) சுற்றுநிருபம்
3) திருத்தச்சட்டம்
4) வேட்புமனு
3) பாடசாலைக்கு வருகை தந்த பணிப்பாளர் ________ புத்தகத்தில் நிறைகளை எழுதிச் சென்றார்.?
1) பாடப்பதிவு
2) வரவு இடாப்பு
3) சம்பவத்திரட்டு
4) வர்த்தமானி
4) பாராளுமன்றத் தேர்தலில் ________ சுதந்திரமாகவும் தெளிவான மனநிலையுடனும் வாக்களித்தனர்.?
1) வாக்காளர்கள்
2) வேட்பாளர்கள்
3) உறுப்பினர்கள்
4) கண்காணிப்பாளர்கள்
5) குழந்தை மெல்ல மெல்ல நடந்தது இவ்வாக்கியத்தில் மெல்ல மெல்ல என்பது?
1) இரட்டைக்கிளவி
2) அடுக்குத் தொடர்
3) அடுக்கிடுக்குத் தொடர்
4) இணைமொழி
6) அவன் அணு அணுவாய் செத்தான். இது?
1) எதுகை
2) சிலேடை
3) மோனை
4) உவமை
7) பின்வருவனவற்றுள் பொதுப்பாற் சொல்?
1) பிரான்
2) சோம்பேறி
3) சீமான்
4) தேவி
8) அவன் அற்புதமாக வேலைகளை செய்வான். இங்கு அற்புதம் என்பது?
1) வடமொழி
2) தமிழ்மொழி
3) கிரேக்க மொழி
4) பிரெஞ்சுமொழி
9) உடைகளுக்கு நன்றாக சவுக்காரம் இட வேண்டும். இங்கு சவுக்காரம் என்பதன் திருத்திய வடிவம்?
1) சவர்க்காரம்
2) சவற்காரம்
3) சவக்காரம்
4) சவட்காரம்
10) உன்னால் எனக்கு காது குத்த முடியாது. இங்கு காது குத்தல் என்ற மரபு தொடரின் கருத்து?
1) காதினை குத்துதல்
2) தோடு குத்துதல்
3) ஏமாற்றுதல்
4) மறைத்தல்