தமிழியல் வினா விடைகள்
1) சந்தையில் பொருட்களை மலிவாக வாங்கினேன்.| - இங்கு மலிவு என்பதன் எதிர்ப்பொருட்சொல்?
1) ஒறுப்பு
2) விருப்பு
3) இலாபம்
4) குறைவு
2) ஒரு பொருளைப் பற்றிக் கேட்போர் மகிழுமாறு உயர்த்திக் கூறும் அணி,?
1) தற்குறிப்பேற்றம்
2) சிலேடை
3) உருவகம்
4) உயர்வுநவிற்சி
3) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை என்பன?
1) ஐங்கணை
2) ஐந்திணை
3) ஐவகை நிறங்கள்
4) ஐவகை பரிசங்கள்
4) ஒருவர் இறந்த பின்னர் அவரின் உறவுப் பெண்கள் அவரை நினைத்துப் புலம்புதல்?
1) ஒத்திகை
2) ஒப்பாரி
3) ஓலக்கம்
4) ஒப்புரவு
5) பிரயாசப்படு, இடம், மான் என்ற சொற்களுக்கு நிகரான சொல்?
1) உலை
2) உளை
3) உழை
4) அழை
6) பல வடிவங்களிலான அல்மிரா (Almirah) க்கள் சந்தையில் கிடைக்கின்றன. அல்மிரா (Almirah) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான கலைச்சொல்?
1) நிலைப்பேழை
2) நிலைக்கண்ணாடி
3) அலுமாரி
4) பீரோ
7) அலகு - அழகு என்ற சொற்கள் குறிக்கும் பொருள் முறையே,?
1) கடல் - சிங்கம்
2) கூர்மை - சிறப்பு
3) கூர்மை - கடல்
4) சிறப்பு - சிங்கம்
8) அதி மிகுந்த அறிவுப் புலமையை வெளிப்படுத்தும் அருஞ்சொற்றொடர்?
1) நுண்மாண் நுழைபுலம்
2) அண்ட சராசரம் அனைத்தும்
3) உணர்வொழி காலம்
4) சாதுரியமாகவும், மாதுரியமாகவும்
9) பின்வருவனவற்றுள் பிரான்சிய மொழிச் சொற்கள் கொண்ட தொகுதி?
1) துக்கம், சீலம், பிக்கு
2) பென்சில், மைனர், சினிமா
3) பட்டாளம், துருப்பு, இலாந்தர்
4) முலாம், சுமார், சால்வை
10) சுருட்டு - கட்டு என்பது போல புத்தகம்?
1) தொகுதி
2) குவியல்
3) கூட்டம்
4) அடுக்கு