தமிழியல் வினா விடைகள்
1) அருவருக்கத்தக்க செயலை குறிப்பதற்கு பயன்படுத்தக்கூடியது?
1) ஆகா
2) ஓகோ
3) அம்மம்மா
4) சீசீ
2) பழித்துப் பேசுதல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) நாக்கு புரளுதல்
2) நாக்கு வளைத்தல்
3) நாக்கு தவறுதல்
4) நாக்கு நீட்டல்
3) அப்பாவியாக இருந்த சுந்தரனுக்கு இப்பொழுது வால்முளைத்து விட்டது. வால் முளைத்தல் என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள்?
1) உலகம் பிடிபடல்
2) சேட்டை பண்ணுதல்
3) பிடிவாதம் செய்தல்
4) முரண்பட்டு நிற்றல்
4) பிறரை ஏமாற்றி வாழ்பவன் தனது பெருமையா இழப்பான் என்ற கருத்தைத் தரும் பழமொழி?
1) வெள்ளைக்கில்லை கள்ளச்ச்சிந்தை
2) சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்
3) உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை
4) எதார்த்தவாதி வெகுசன விரோதி
5) எதிர்ப்பொருள் குறிக்கும் இரு சொற்கள் இணைந்து வரும் இணைமொழிக்கு உதாரணம்?
1) ஆதியந்தம்
2) ஓட்டியுலர்ந்து
3) கொஞ்சிக்குலாவி
4) கள்ளங்கபடம்
6) குறைகளை நீக்கி நல்லதை மட்டும் போற்றும் என்ற கருத்தினைத் தரும் அருஞ்சொற்தொடர்?
1) அருணெறி போற்றாது மருநெறி போற்றி
2) ஆசைகாட்டி மோசஞ்செய்து
3) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி
4) குற்றங்களைந்து குணம் பாராட்டுதல்
7) பெயராகவும் வினையாகவும் வழங்ககூடிய ஒரு சொல்?
1) வால்
2) தாய்
3) உண்
4) பாய்
8) பகுபத உறுப்புக்கள் ஆறும் பெற்று வரும் சொல்?
1) நடந்தான்
2) நடந்தனன்
3) நடப்பான்
4) நடக்கின்றான்
9) பின்வருவனவற்றுள் ஆக்கப்பெயராக அமைவது?
1) புத்திசாலி
2) கண்காட்சி
3) எழுதுகோல்
4) தட்டிக்கேள்
10) உயிர் முன் உயிர் புணர்வதற்கு உதரணமாக அமைவது?
1) பலாவிலை
2) மலைக்கோவில்
3) கடலலை
4) எழுதுகோல்