தமிழியல் வினா விடைகள்
1) எந்தவொரு கலைப்படைப்பினையும் காய்தல் இன்றி நோக்கல் வேண்டும் காய்தல் என்பதன் எதிர் பொருள் சொல்?
1) தேய்தல்
2) உவத்தல்
3) வெறுத்தல்
4) கண்டித்தல்
2) இடையரும் இடைமகளிரான ஆய்ச்சியரும் வாழுமிடம்?
1) குறிஞ்சி
2) முல்லை
3) மருதம்
4) நெய்தல்
3) அரசன் முதலானோர் உழவரும் போது அதனை பொதுமக்கள் அறியு படி கூறுபவன்?
1) முரசறைவோன்
2) தூதுவன்
3) கட்டியக்காரன்
4) கூத்தாடி
4) சிங்கத்தின் இளமைப் பெயர்?
1) போதகம்
2) பரள்
3) அரி
4) குருளை
5) ஆலி, ஆழி, ஆளி என்பன முறையே தரும் பொருள்?
1) ஒலி,கடல்,சிங்கம்
2) கடல்,ஒலி,சிங்கம்
3) சிங்கம்,கடல்,ஒலி
4) கடல்,சிங்கம்,ஒலி
6) பாத்திரம்,கப்பல்,ஆபரணம் எனப் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) படகு
2) வளை
3) கலம்
4) அணி
7) பின்வருவனவற்றுள் எழுவாய் தொக்கு நிக்கும் வாக்கியம்?
1) நாளை வா
2) காற்று வீசியது
3) வந்தான் சீசர்
4) அவன் வந்தனா?
8) ‘கார், நீர், மோர் என்று முப்பேரும்பெற்றாயே’ இங்கு முப்பேர் என்பதனை பிரித்தால்?
1) முன்+பேர்
2) முற்+பேர்
3) மூன்று+பேர்
4) மூப்பு+பேர்
9) ‘மாலை முன்றில் குறுங்கால் கட்டில் மனையோள் துணைவி’ இங்கு முன்றில் என்பது?
1) இலக்கண போலி
2) இலக்கணமுடையது
3) எழுத்துப்போலி
4) மரூஉ
10) புணர்ச்சியில் உடம்படுமெய் தோன்றாத இடம்?
1) தீயை
2) மாவிலை
3) பனையோலை
4) மரவேர்