தமிழியல் வினா விடைகள்
1) இசையால் வசமாகா?
1) இதயமோ உண்டோ?
2) இதயத்தில் உண்டோ?
3) இதயத்திற்கு உண்டோ?
4) இதயம் உண்டோ?
2) வாழ்க்கையில் ஊக்கத்தோடு உழைப்பவரே?
1) வெற்றி அடைவீர்
2) வெற்றி அடைவோம்.
3) வெற்றி அடைவார்
4) வெற்றி அடைந்தார்.
3) பின்வருவனவற்றுள் எழுத்துப் பிழையற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.?
1) இருபதாம் நூற்றாண்டிலே தமில்மொழி பல துறைகளிலும் வளர்ந்து வருகின்றது.
2) இருபதும் நூற்றாண்டிலே தமிழ்மொழி பல துரைகளிலும் வளர்ந்து வருகின்றது.
3) இருபதாம் நூற்றாண்டிலே தமிழ்மொழி பல துறைகழிலும் வழர்ந்து வருகின்றது.
4) இருபதாம் நூற்றாண்டிலே தமிழ்மொழி பல துறைகளிலும் வளர்ந்து வருகின்றது.
4) வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியற் கட்சிகள் தேர்தல் . ________ முனைப்போடு மேற்கொள்கின்றன.?
1) விதப்புரையை
2) பரப்புரையை
3) நயப்புரையை
4) மதிப்புரையை
5) மின்கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சிகளால் பாராளுமன்றத்திற்குச் சமர்பிக்கப்பட்ட ________ வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.?
1) கூட்டறிக்கை
2) சுற்றறிக்கை
3) மதிப்பீடு
4) பிரேரணை
6) கழிவு நீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி விழிப்பூட்ட மக்கள் மத்தியில் ________ மேற்கொள்ளப்படல் வேண்டும்.?
1) பிரசாரம்
2) பிரசுரம்
3) பிரசங்கம்
4) பிரமாணம்
7) ஒருவருடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருத்தல் என்ற பொருள் தரும் அருஞ்சொற்றொடர்?
1) குறு குறு நடந்து சிறுக்கி நீட்டி
2) .வழிமேல் விழி வைத்து
3) ஊணுறக்கம் இல்லாமல்
4) உணர்வொலி காலம்
8) பின்வருவனவற்றுள் ஒல்லாந்தர் மொழி சொற்கள் கொண்ட தொகுதி?
1) கேத்தல்,நொத்தாரிசு,தோம்பு
2) கடதாசி,கரத்தை,சப்பாத்து
3) குசினி,பீரோ,பட்டாளம்
4) பென்சில்,மைல்,சினிமா
9) குமரன் வேலைக்கு ‘அப்பிளிகேசன்’ (யுppடiஉயவழைn) அனுப்பினான் அப்பிளிகேசன் என்ற சொல்லின் தமிழ் சொல்?
1) படிவம்
2) விண்ணப்பம்
3) சான்றிதழ்
4) ஆவணம்
10) சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்பன?
1) ஐம்பொறி
2) ஐம்பூதம்
3) ஐம்புலன்
4) ஐம்பால்