தமிழியல் வினா விடைகள்
1) அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்பன?
1) ஐம்பொறி
2) ஐம்பால்
3) சால்பு
4) ஐந்திணை
2) வெட்டவெளி என்பது?
1) இணைமொழித் தொடர்
2) அடுக்குத் தொடர்
3) மரபுத் தொடர்
4) அடுக்கிடுக்குத் தொடர்
3) குழந்தைப் பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் இடங்கொடு;த்தல் கூடாது. ஷஇடங்கொடுத்தல்| என்ற மரபுத் தொடரின் பொருள்?
1) வசிக்க இடம் கொடுத்தல்.
2) எதற்கும் இடம் கொடுத்தல்
3) கண்டிப்பின்றி வளர்த்தல்
4) வறுமைப்படாது காத்தல்
4) ஒருவனது அறிவு முதலியவற்றை ஆராய்தல்| என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) ஆழம் பார்த்தல்
2) ஆளை அறிதல்
3) ஆற்றுப்படுத்தல
4) அள்ளியிறைத்தல்
5) பின்வருவனவற்றுள் ஷஇன்ப துன்ப| உணர்வினைப் புலப்படுத்தப் பயன்படுத்தும் தொடர்?
1) ஆடிப்பாடி
2) சுக துக்கம்
3) எதிரும் புதிரும்
4) ஆசாபாசம்
6) “எமக்கு உதவி செய்தவர்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யக் கூடாது“ என்னும் பொருளைத் தரும் பழமொழி?
1) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
2) அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடாதே
3) ஊரோடு ஒத்து வாழ்
4) ஏரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்
7) ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட ;டியாக இருந்தார்|. என்பதைப் புலப்படுத்தப் பொருத்தமான உவமைத் தொடர்?
1) வெள்ளிடை மலை போல
2) ஓரச்சில் உருக்கி வார்த்தாற் போல
3) கலங்கரை விளக்கம் போல
4) அடுத்தது காட்டும் பளிங்கு போல
8) பின்வருவனவற்றுள் தோன்றல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணமாக அமைவது?
1) மரவேர்
2) கடலலை
3) கோவில்
4) கற்பாறை
9) கடிநாய் துரத்தியது| கடிநாய் என்பது?
1) பண்புத் தொகை
2) உவமைத்தொகை
3) உவமைத் தொகை
4) வினைத்தொகை
10) பின்வருவனவற்றுள் தொழிற் பெயராக அமைவது?
1) மரம்
2) வைத்தியசாலை
3) கோடை
4) பொங்கல்