தமிழியல் வினா விடைகள்

1) “சிறியார் சிறுமையும் தோன்றாதாம்“ என்ற தொடரில் ஷசிறுமை| என்பதன் எதிர்ப்பொருட ; சொல்?
1) பெருமை
2) பருமை
3) பொறுமை
4) கீழ்மை
2) “இன்றைய வாலிபர்கள் நாளைய தலைவர்கள ;“ இங்கு வாலிபன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
1) சிறுமி
2) வாலிபை
3) வாலை
4) கிழத்தி
3) வயலும் வயல் சார்ந்த இடமும்?
1) குறிஞ்சி
2) முல்லை
3) மருதம்
4) நெய்தல்
4) சபையிற் சொல்லத்தகாத சொல்லை மறைத்து வேறு வகையில் சொல்லுதல்?
1) குழூஉக்குறி
2) மங்கலம்
3) இலக்கணப்போலி
4) இடக்கரடக்கல்
5) யானையின ; இளமைப் பெயர்?
1) பறள்
2) போதகம்
3) குருளை
4) அரி
6) உலை, உழை, உளை என்பன முறையே தரும் பொருள்?
1) நீரலை, இடம், அழுகை
2) அளவு, குலை, தயிர்
3) சபை, தவிர், விளக்கு
4) கொடு, கெடு, சிறப்பு
7) செல்வம், இடம், விலங்கு எனப் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) குதிரை
2) கரி
3) மாடு
4) அரி
8) அந்த அறிஞர் வெளியுலகிற்குத் தெரியாதிருந்தார்|. என்பதற்குப் பொருத்தமான உவமைத்தொடர்?
1) கலங்கரை விளக்குப் போல
2) அத்தி பூத்தாற் போல
3) குடத்துள் விளக்குப் போல
4) ஊமை கண்ட கனவு போல
9) மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்களுக்கு (Seminar) செமினார் நடாத்தப்பட்டது. இங்கு Seminar என்பதன் தமிழ்ச்சொல்?
1) கருத்தரங்கு
2) செயலமர்வு
3) விமர்சனம்
4) வழிகாட்டல்
10) பின்வருவனவற்றுள் பாரசீக மொழிச் சொல்?
1) துட்டு
2) சலம்
3) திவான்
4) சாவி
தேர்வு