தமிழியல் வினா விடைகள்
1) நினைவில் வைத்திருக்கின்றேன ;. இங்கு இல்| உருபு உணர்த்தி நிற்கும் பொருள்?
1) இடப் பொருள்
2) கொடைப் பொருள்
3) நட்புப் பொருள்
4) நீங்கற் பொருள
2) படித்திலன் என்பதில் வந்துள்ள எதிர்மறை இடைநிலை?
1) படி
2) த்
3) இல்
4) அன்
3) ஓடும் குதிரை என ;பதில் இடம்பெற்றுள்ள பெயரெச்ச விகுதி?
1) ஓடு
2) உ
3) உம்
4) ஐ
4) கண்ணனும் பாடினான் இங்கு வந்துள்ள உம் இடைச்சொல் உணர்த்தி நிற்கும் பொருள்?
1) தேற்றம்
2) பிரிநிலை
3) உயர்வு சிறப்பு
4) எச்சம்
5) நறுந்தாமரை விரும்பும் நன்னுதலே அன்னாள் அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு| என்ற பாடலடியில் வந்துள்ள பயனிலை?
1) அன்னாள்
2) விரும்பும்
3) அறிந்தாள்
4) ஆங்கு
6) பின்வருவனவற்றுள் உயிர்த் தொடர்க் குற்றியலுகரமாக அமைவது?
1) ஆடு
2) பயறு
3) பஞ்சு
4) சால்பு
7) பின்வருவனவற்றுள் நிறுத்தக் குறிகள் சரியாக இடம்பெற்றுள்ள வாக்கியம்?
1) மேகம் கறுத்தது. மழை கொட்டியது. வெள்ளம் பாய்ந்தது.
2) மேகம் கறுத்தது! மழை கொட்டியது! வெள்ளம் பாய்ந்தது!
3) மேகம் கறுத்தது; மழை கொட்டியது: வெள்ளம் பாய்ந்தது:
4) மேகம் கறுத்தது: மழை கொட்டியது: வெள்ளம் பாய்ந்தது.
8) பழைய காலத்திலே ஆசிரியரைத் தேடி அவரிடம் சென்று, அவருக்கு வேண்டிய பணிவிடை செய்து மாணவர்கள் படித்து வந்தார்கள். மாணவர்களைத் தேடி ஆசிரியர் சென்று படிப்பிக்கும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. மகாபாரத காலம் வரை ஆசிரியரைத் தேடியடையும் வழக்கமே இருந்தது.?
1) மகாபாரத காலத்தில் ஆசிரியரைத் தேடிச் சென்று கற்றனர்.
2) பழங்காலத்தில் ஆசிரியரைத் தேடிச் சென்றே மாணவர் கல்வி கற்றனர்.
3) மாணவர்கள் ஆசிரியருக்குப் பணிவிடை செய்தனர்.
4) ஆசிரியருக்கு பணிவிடை செய்தலே கற்றல்.
9) மனிதன் பூமியில் பிறக்கும் போது பூரண குணாம்சங்களோடு பிறக்கின்றான். அவன் வளரும் பாதைகள் வெவ்வேறுபட்ட சூழலில் அமைவதால் குணாம்சங்களும் மாறுபடுகின்றன. சூழலே மனிதனது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற காரணியாக விளங்குகின்றது.?
1) மனிதன் வளரும் பாதை வெவ்வேறானவை.
2) மனிதன் பிறக்கும் போதே பூரண குணாம்சங்களுடன் பிறக்கின்றான்.
3) மனித வாழ்வைத் தீர்மானிக்கும் காரணியாக சூழல் விளங்குகின்றது
4) பூரண மனிதன் வாழ்வில் மேம்பாடடைவான்.
10) நீதியின் வழியாலன்றி உலகத்தை?
1) செம்மைப்படுத்த முடியும்
2) செம்மைப்படுத்த முடியாது
3) செம்மைப்படுத்த வேண்டும்
4) செம்மைப்படுத்தலாகும்.