தமிழியல் வினா விடைகள்

1) ஏழை எளியவர் என்பது?
1) இணைமொழித் தொடர்
2) அடுக்குத்தொடர்
3) மரபுத்தொடர்
4) உவமைத்தொடர்
2) அரும்பாடுபட்டு உயிர் வாழுதல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) வயிறு கடித்தல்
2) வாய்ப்பூட்டுப் போடுதல்
3) வயிறு கழுவுதல்
4) வயிற்றில் அடித்தல்
3) தொழுகள்ளரை நம்பி நடவாதீர் தொழுகள்ளர் என்றால்?
1) ஏமாற்றுகாரர்
2) ஏமாளிகள்
3) .அண்டிக்கொடுப்பவர்
4) களவு செய்பவர்
4) பின்வருவனவற்றுள் மகிழ்ச்சியான உணர்வினை புலப்படுத்த பயன்படும் தொடர்?
1) ஓடிஆடி
2) ஓய்வு ஒழிவு
3) ஆடிப்பாடி
4) ஓட்டமும் நடையும்
5) இட்டுக் கெட்டார்எங்குமில்லை என்ற பழமொழியின் கருத்து?
1) உண்மையைச் சொல்லிக் கெட்டவர் எங்குமில்லை
2) தருமம் செய்து கெட்டவர் எங்குமில்லை
3) சேமித்து வைத்துக் கெட்டவர் எங்குமில்லை
4) பொறுமையாக இருந்து கெட்டவர் எங்குமில்லை
6) நெருப்பில் விழுந்த தேள் எடுத்தவனையே கொட்டும் என்ற பழமொழி தரும் உட்பொருள்?
1) தேள் நெருப்பில் விழுந்து விட்டால் அதனைக் காப்பாற்ற கூடாது
2) தீயவனுக்கு நன்மை செய்யப்போய் ஆபத்தை விலைக்கு வாங்குதல்
3) தீயவனானாலும் ஒருவன் செய்த நன்றியை மறக்க மாட்டான்
4) நெருப்பில் விழ்ந்த தேள் வேதனையில் எடுத்தவனையே கொட்டிவிடும்
7) மின்னும் தார் வீமன் தான் மெய்ம் மரபு இங்கு தார் என்பதன் பொருள்?
1) மலர்
2) கருமை
3) மாலை
4) முடி
8) “மல்லல் மறுகில் மட நாகுடனாகச் செல்லும் மழவிடை” நாகு என்பதன் ஒத்த கருத்துச் சொல்?
1) பசு
2) எருது
3) காலை
4) ஆடு
9) பாரதியின் பாடல்களை பாமரரும் படித்ததின் புறுகின்றனர். பாமரா என்பதன் எதிர் பொருள் சொல்?
1) அறிவிலிகள்
2) நகரத்தவர்
3) பண்டிதர்
4) புத்திசாலிகள்
10) “மாரவேள் சிலை குளிக்க மயில் குளிக்கும் காலம்” இங்கு மாரவேள் என்பவன்?
1) முருகன்
2) சிவன்
3) நந்திவர்மன்
4) மன்மதன்
தேர்வு