தமிழியல் வினா விடைகள்
1) பின்வரும் வாக்கியங்களுள் வேறுபட்ட கருத்தினை தரும் வாக்கியம் எது??
1) நீ அல்லது நான் இதனை செய்ய வேண்டும்
2) நீயாவது நானாவது இதனை செய்ய வேண்டும்
3) நீயும் நானும் இதனை செய்ய வேண்டும்
4) நீயேனும் நானேனும்இதனை செய்ய வேண்டும்
2) மலர் கொய்வோனை கண்டேன். கொய்வோனை என்பது?
1) தொழில் பெயர்
2) சினைப்பெயர்
3) வினைமுற்று
4) வினையாலணையும் பெயர்
3) பின்வருவனவற்றுள் எழுத்துப் பிழையற்ற வாக்கியத்தை தெரிவு செய்க?
1) இந்நாட்டின் முதுகெலும்பாக விலங்குபவர்கள் உலவர்கலாவார்
2) பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
3) நவநீதன் ஒழிவுமறைவின்றி எந்த விடையத்தையும் வெளிப்படையாக பேசுபவன்
4) அங்கத்தவர்கள் எல்லோரும் கூட்டத்திற்கு சமூகமலித்திருந்தார்கள்
4) உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக பல . ________ போட்டியிடுகின்றனர்.?
1) கண்காணிப்பாளர்கள்
2) உறுப்பினர்கள்
3) வேட்பாளர்கள்
4) வாக்காளர்கள்
5) உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட எனது நண்பன் மிகக் குறைந்த வாக்குகளையே எடுத்ததால் தனது ________ இழந்தான்.?
1) சேமிப்புப் பணத்தை
2) கட்டுப்பணத்தை
3) முற்பணத்தை
4) சந்தாப் பணத்தை
6) அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆணைக்குழு செய்த ________ அரசாங்கத்தினால் பரிசீலனை செய்யப்படுகிறது.?
1) ஆய்வுரை
2) பரிந்துரை
3) மதிப்புரை
4) அணிந்துரை
7) “கமலப் பள்ளி துஞ்சும் வெள்ளை அன்னம்” துஞ்சும் என்பதன் பொருள்?
1) நீந்தும்
2) உறங்கும்
3) தாவும்
4) அமரும்
8) “குற்றம்கடிதல் வடு அன்று; வேந்தன் தொழில்” இங்கு வடு என்பதன் பொருள்?
1) காயம்
2) பிஞ்சு
3) பழி
4) சினம்
9) “பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றன் பண்ணினானே” பதுமத்தான் என்பவன்?
1) சிவன்
2) திருமால்
3) இயமன்
4) பிரமன்
10) “ஊடலில் தோற்றவர் வென்றார்” ஊடல் என்பதன் எதிர்கருத்துச் சொல்?
1) கூடல்
2) மோதல்
3) தேடல்
4) சாதல்