தமிழியல் வினா விடைகள்
1) ஆச்சியர்க்கை வந்ததற்பின் மோரென்று பேர் படைத்தாய்” ஆய்ச்சி என்பதன் ஆண்பால்?
1) ஆய்வாளன்
2) ஆயன்
3) ஆயர்
4) அப்பு
2) கலைப்படைப்பொன்றின் குறைநிறைகளை ஆராய்தல்?
1) கண்டனம்
2) திறனாய்வு
3) அணிந்துரை
4) நயவுரை
3) அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் குணங்கள் சேர்ந்த பண்பு?
1) பெருமை
2) அறம்
3) சால்பு
4) இறக்கம்
4) ஒருவருக்குரிய நிலம் முதலான சொத்துக்கள்?
1) ஆதனம்
2) ஆவணம்
3) எய்ப்பில் வைப்பு
4) முதுசம்
5) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பகுப்பு?
1) .ஐம்பால்
2) ஐம்பொறி
3) ஐந்திணை
4) ஐந்தொழில்
6) தற்போது உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக “டிமாணட்” உண்டு. “டிமாணட்” என்ற ஆங்கில சொல்லுக்குப் பொருத்தமான கலைச்சொல்?
1) வரவு
2) கேள்வி
3) நிரம்பல்
4) பெறுமதி
7) மறை, சுருதி, ஆரணம் என்ற சொற்களுக்கு நிகரான சொல்?
1) காடு
2) ஒளி
3) வேதம்
4) இசை
8) உடுக்களின் கூட்டம் திரள் எனப்படும் மலைகளின் கூட்டம்?
1) குழாம்
2) குவியல்
3) வரிசை
4) தொடர்
9) எருமையின் இளையது கன்று சிங்கத்தின் இளையது?
1) பரள்
2) பிள்ளை
3) குருளை
4) போதகம்
10) மாடுகள் கட்டப்படும் இடம்?
1) பந்தி
2) தொழுவம்
3) லாயம்
4) மந்தை