தமிழியல் வினா விடைகள்

1) பால்நிலவு எறித்தது. பால் நிலவு என்பது?
1) பண்புத்தொகை
2) உவமைத்தொகை
3) உம்மைத்தொகை
4) வினைத்தொகை
2) “சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” இங்கு இடம்பெற்ற சொற்களின் வகை?
1) பெயர்,வினை, இடம்
2) பெயர்,வினை,உரி
3) பெயர்,இடை,உரி
4) வினை,உரி,இடை
3) பன்மை விகுதி பெற்று வரக்கூடிய சொல்?
1) நட்பு
2) தண்ணீர்
3) பொறமை
4) சந்தர்ப்பம்
4) ஆசிரியரோடு மாணவன் வந்தான். இங்கு ஓடு உருபுக்குபதிலாக பயன்படுத்த கூடிய சொல்லுருபு?
1) கொண்டு
2) உடைய
3) உடன்
4) ஆக
5) நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்னும் வாக்கியத்தின் எழுவாய்?
1) நான்
2) இன்பம்
3) வையகம்
4) தோன்றாமல் நிற்கின்றது
6) பின்வருவன வற்றுள் நிறுத்தக்குறிகள் சரியாக இடப்பட்டுள்ள வாக்கியம்?
1) நான் சொல்வதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா என்று வாலிபன் கேட்டான்.
2) “நான் சொல்வதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?” என்று வாலிபன் கேட்டான்
3) நான் சொல்வதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா”? என்று வாலிபன் கேட்டான்
4) “நான் சொல்வதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா” என்று வாலிபன் கேட்டான்
7) அரண்மனை உப்பரிகையில் சோழனும் அரசியும் அமர்ந்திருக்கின்றார்கள். இதில் ஷஉப்பரிகை| என்பதன் பொருள்?
1) மேல்மாடம்
2) அரியணை
3) அந்தப்புரம்
4) அரமியம்
8) முகரும் எறும்புகளின் ஊர்வலம்| - இங்கு முகர்தல்| என்பதன் ஒத்த பதம்?
1) மணத்தல்
2) ஊருதல்
3) உண்ணுதல்
4) நகர்தல்
9) போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணராக வைத்தியர் அருளம்பலம் கடமையாற்றினார். இதில் நிபுணன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
1) நிபுணி
2) நிபுணிச்சி
3) நிபுணள்
4) நிபுணை
10) தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழ்வது சிறந்த பண்பு| - இதில் பிறர்| என்ற சொல்லின் எதிர்ப்பொருட் சொல்?
1) அவர்
2) சமர்
3) தமர்
4) பகைவர்
தேர்வு