தமிழியல் வினா விடைகள்

1) அசூயை என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்?
1) போட்டி
2) பொறாமை
3) மனக்குறை
4) செருக்கு
2) ஒருவன் தன் நிலையிலிருந்து தாழ்வானாயின் அற்பர்களும் அவமதிப்பர்| என்ற கருத்தைத் தரும் பழமொழி?
1) உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை
2) கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா?
3) சேற்றில் புதைந்த யானையை காகமும் கொத்தும்.
4) காகம் திட்டி மாடு சாகாது.
3) இரக்கப் போனாலும் சிறக்கப் போ| என்ற பழமொழிக்குரிய பொருத்தமான கருத்து?
1) வறுமையிலும் செம்மை
2) பணத்தின் வலிமை
3) கொடையின் சிறப்பு
4) தருமத்தின் உயர்வு
4) கணவனை இழந்த மனைவி கையறு நிலையை அடைந்தாள். இதில் கையறுதல் என்ற மரபுத் தொடரின் கருத்து?
1) நட்டமடைதல்
2) வருந்துதல்
3) உதவியற்றிருத்தல்
4) திகைத்தல்
5) ஒத்தகருத்துள்ள சொற்களைக் கொண்ட இணைமொழி?
1) சீரும் சிறப்பும்
2) ஆதிஅந்தம்
3) அல்லும் பகலும்
4) ஓட்டமும் நடையும்
6) புறக்குடத்து வார்த்த நீர் போல| என்ற உவமைத் தொடருக்குப் பொருத்தமானது?
1) காட்டில் எறித்த நிலாப்போல
2) காட்டாற்று வெள்ளம்போல
3) கல்மேல் எழுத்துப்போல
4) சிறகற்ற பறவைபோல
7) அழுத குழந்தையை தாய் அன்போடு அணைத்து எடுத்தாள். இதில் பெயரெச்சமாக அமைந்த சொல்?
1) அன்போடு
2) எடுத்தாள்
3) அழுத
4) அணைத்து
8) வருபுகழ் என்பது?
1) வினைத்தொகை
2) பண்புத்தொகை
3) உவமைத்தொகை
4) உம்மைத்தொகை
9) பாலோடு தேனை சேர்த்தால் சுவை கூடும். - இவ்வாக்கியத்தின் எழுவாய்?
1) பால்
2) தேன்
3) சுவை
4) பாலுந் தேனும
10) மக்காள் வாரீர்|. - இது?
1) எழுவாய் வேற்றுமை
2) விளி வேற்றுமை
3) உடனிகழ்ச்சி வேற்றுமை
4) நீங்கல் வேற்றுமை
தேர்வு