தமிழியல் வினா விடைகள்

1) நான் ஒரு பாடகன் - மிருதங்கமும் வாசிப்பேன் - இவ்விரு வாக்கியங்களையும் இணைப்பதற்குப் பொருத்தமான இணைப்பிடைச் சொல்?
1) ஏனெனில்
2) எனவே
3) ஆகவே
4) எனினும்
2) அனுமன் 'இங்கேயும் நான் சீதையைக் காணாவிட்டால் இலங்கையை அழித்து நானும் இறப்பேன்". என திடசங்கற்பம் கொண்டான். - இதில் இடம்பெற்றுள்ள தலைமை வாக்கியம்?
1) அனுமன் திடசங்கற்பம் கொண்டான்.
2) நான் சீதையைக் காணாவிட்டால் இலங்கையை அழிப்பேன்.
3) நானும் இறப்பேன்.
4) நான் சீதையைக் காணாவிட்டால் இலங்கையை அழித்து நானும் இறப்பேன்.
3) பின்வருவனவற்றுள் கூட்டுப் பெயருக்கு உதாரணம்?
1) தொழிலாளி
2) தோட்டக்காரன்
3) கட்டுரை
4) அறிவாளி
4) பின்வருவனவற்றில் இயல்பு புணர்ச்சியாக அமைவது?
1) மாங்கனி
2) கோயிற்புறா
3) வானவில்
4) ஒழுக்கமுடைமை
5) வரமாட்டேன் என்பதை பகுபத உறுப்புக்களாகப் பிரித்தால்?
1) வர + மாட்டேன்
2) வா + மாட்டு + ஏன்
3) வா + மாட்டேன்
4) வர + மாட்டு + ஏன்
6) சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு பகுதிÉ இலக்கியத்தின் ஒரு வடிவம். இலக்கியம் என்பது ஒரு கலை. கலையைப் படைப்பது படைப்புத்திறன். படைப்புத்திறனை ஒருவன் இன்னொருவனுக்குக் கற்பிக்க முடியாதுÉ ஒருவனிடமிருந்து இன்னொருவன் கற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படிக் கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதுதான் படைப்புத்திறன்.?
1) சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம்.
2) கலையைப் படைப்பது படைப்புத்திறன்.
3) படைப்புத்திறனைக் கற்றுக் கொள்ள முடியாது.
4) கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதுதான் படைப்புத்திறன்.
7) நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியாகச் சென்று புல்லுக்கும் பயன் கொடுக்கும். தொன்மையான இவ்வுலகில் நல்லார் ஒருவர் இருப்பாராயின் அவர் நிமித்தம் எல்லோருக்குமாக மழை பெய்யும்.?
1) நல்லவர் ஒருவரால் எல்லோரும் பயன் பெறுவர்.
2) நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் சேரும்.
3) மழை எல்லோருக்கும் கிடைக்கின்றது.
4) நல்லார் இருக்கும்போது நாட்டில் மழைபெய்யும்.
8) அவன் உறங்கிக் கொண்டிருந்த அம்பலத்துக்கு வந்த சிலர் 'பெரும்பசி எங்களை வருத்துகின்றது"?
1) என்றார்
2) என்றனர்.
3) என்பர்
4) என்கின்றனர்.
9) நீ வகுப்பிற்கு ஒழுங்காக வந்து கற்றிருப்பாயானால்?
1) பரீட்சையில் சித்தியடைந்திருப்பாய்.
2) பரீட்சையில் சித்தியடைவாய்.
3) பரீட்சையில் சித்தியடைந்தாய்.
4) பரீட்சையில் சித்தியடையலாம்.
10) மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள்?
1) தரமானவையாக இருந்தன.
2) தரமானதாக இருந்தது.
3) தரமானவையாக இருந்தது.
4) தரமானதாக இருந்தன.
தேர்வு