தமிழியல் வினா விடைகள்

1) பின்வருவனவற்றுள் உடன்பாட்டு ஏவல் ஒருமை வினைமுற்று?
1) படியுங்கள்
2) படிக்காதே
3) படித்தீரா
4) படி
2) கமலன் சிறந்ததொரு அறிஞன். இங்கு வந்துள்ள அறிஞன் என்பதன் பகுதி?
1) அறிஞ்
2) அறி
3) அறிஞ
4) அ
3) பின்வருவனவற்றுள் சரியான நிறுத்தக் குறியீடுகள் இடப்பட்ட வாக்கியம்?
1) தம்பி, எங்கே போனாய்?
2) தம்பி எங்கே போனாய்?
3) தம்பி. எங்கே போனாய்?
4) தம்பி எங்கே, போனாய்?
4) களவும் கற்று மற. இங்கு உம் இடைச்சொல் தரும் பொருள்?
1) உடன்பாடு
2) எதிர்மறை
3) பிரிநிலை
4) தெரிநிலை
5) எழுதியவனை கண்டால் கைகொடுப்பேன். இவ்வாக்கியத்தில் எழுதியவனை என்பது?
1) வினை
2) வினையாலணையும் பெயர்
3) பொருட்பெயர்
4) சினைப்பெயர்
6) பின்வருவனவற்றுள் எழுத்து பிழையற்ற வாக்கியங்களைத் தெரிவு செய்க?
1) குற்றமுல்ல நெஞ்சு குருகுருக்கும்.
2) குற்றமுள்ள நெஞ்சு குருகுருக்கும்.
3) குற்றமுல்ல நெஞ்சு குறுகுறுக்கும்.
4) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
7) பின்வருவனவற்றுள் எழுத்து பிழையற்ற வாக்கியங்களைத் தெரிவு செய்க?
1) வெண்ணிலா நீலவானில் உலா வந்தது.
2) வென்னிலா நீளவானில் உலா வந்தது.
3) வெண்ணிலா நீளவானில் உலா வந்தது.
4) வெண்ணிலா நீலவானில் உலா வந்தது.
8) ஒருவராலும் படைக்கப்படாது தானே தோன்றுவது ________ எனப்படும்?
1) செவிலி
2) சுயம்பு
3) சுயசரிதை
4) சுயம்வரம்
9) கல்லிலேனும் செப்பேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய புகழ் ________ எனப்படும்.?
1) மெய்க்கீர்த்தி
2) மெய்ப்பாடு
3) சிறுபட்டி
4) யாக்கம்
10) வேறு துணை இல்லாததால் பகைவனிடம் ________ அடைந்தான்.?
1) தட்சனை
2) சரணாகதி
3) சால்பு
4) கீர்த்தி
தேர்வு