தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் நிகழ்காலம் இடைநிலையாக அமைவது?
1) கின்று,கிறு
2) ப்,வ்
3) இன்,இல்
4) த்,ட்
2) எனது கை என்பது?
1) பண்புத்தற்கிழமை
2) ஒன்றன் கூட்டத்தற்கிழமை
3) உறுப்புத்தற்கிழமை
4) பலவின் கூட்டத்தற்கிழமை
3) பனங்காய் என்பதனை பிரித்து எழுதினால்?
1) பன + காய்
2) பனை + காய்
3) பணம் + காய்
4) பனங் + காய்
4) நீதிபதி நீதிமன்றத்திற்கு வந்தார். இங்கு நீதிபதி என்பது?
1) ஆண்பால்
2) பெண்பால்
3) பொதுப்பால்
4) பலவின்பால்
5) நடந்தனன் என்பதன் இடைநிலை?
1) ந்த்
2) அன்
3) நட
4) ஆன்
6) தம்பி வெற்றிலை நட்டான். இங்கு வெற்றிலை என்பது?
1) பொருளாகு பெயர்
2) இடவாகு பெயர்
3) காலவாகு பெயர்
4) சினையாகு பெயர்
7) நாக்கு என்பது?
1) மென்றொடர் குற்றியலுகரம்
2) வன்றொடர் குற்றியலுகரம்
3) இடைத்தொடர் குற்றியலுகரம்
4) ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
8) அவன் வேகமாக வந்தான். இங்கு வந்தான் என்பதன் பகுதி?
1) வந்து
2) ஆன்
3) வா
4) ந்
9) பின்வருவனவற்றுள் முதற்போலியாக வரும் சொல்?
1) அய்யா
2) சாம்பர்
3) சமயம்
4) முன்றில்
10) வாழ்க! பல்லாண்டு என்பது?
1) கூற்றுவாக்கியம்
2) ஏவல் வாக்கியம்
3) வியங்கோள் வாக்கியம்
4) கூட்டு வாக்கியம்