தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் எழுத்து பிழையற்ற வாக்கியம்?
1) அவன் உண்னை விட சிறந்த மாணவன்
2) அவன் உன்னை விட சிறந்த மாணவன்
3) அவன் உண்னை விட சிறந்த மானவன்
4) அவன் உன்னை வட சிரந்த மாணவன்
2) பின்வருவனவற்றுள் எழுத்து பிழையற்ற வாக்கியம்?
1) நல்ல பலக்கவலக்கம் வாழ்க்கைக்கு முக்கியம்
2) நல்ல பலக்கவலக்கம் வாள்க்கைக்கு முக்கியம்
3) நல்ல பழக்கவலக்கம் வாழ்க்கைக்கு முக்கியம்
4) நல்ல பழக்கவழக்கம் வாழ்க்கைக்கு முக்கியம்
3) கையறுத்தல் எனும் மரபுத்தொடர் குறிப்பது?
1) தவறுதல்
2) உடன்படல்
3) வருந்துதல்
4) கைவெட்டுதல்
4) நீ ஓடுவது நல்லது. இங்கு ஓடுதல் என்பதை உணர்த்தும் மரபுத்தொடர்?
1) கால் சாய்தல்
2) கால் கிளர்தல்
3) கால் பின்னுதல்
4) காலை சுற்றுதல்
5) அனைத்திற்கும் மனநிறைவு வேண்டும். என்பதனை உணர்த்தும் பழமொழி?
1) பேராசை பெருநட்டம்
2) பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்
3) போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து
4) மனம் உண்டால் இடமுண்டு
6) பதறாத காரியம் சிதறாது எனும் பழமொழி உணர்த்தும் கருத்து?
1) எந்த வேலையும் பொறுமையுடன் செய்ய வேண்டும்
2) காரியம் பதறுவது உண்மை
3) கை தவறினால் நீர் சிதறும்
4) பொறுமையுடன் வேலை செய்தால் பதறும்
7) உள்ளங்கை நெல்லிக்கனி போல எனும் உவமைத்தொடர் குறிப்பது?
1) நெல்லிக்கனியின் பாரம்
2) தெரியாத பொருள்
3) உள்ளங்கையின் மகிமை
4) தெட்டத்தெளிவு
8) மற்றோர் உயிர் பொருளிலிருந்து தம் உணவை உறிஞ்சி வாழும் தாவரம் ________ எனப்படும்?
1) ஆலம்
2) மா
3) ஒட்டுண்ணி
4) தோடை
9) அறிவுத்துறைகள் பற்றிய விடயங்களை தொகுத்தும் வகுத்தும் அகரவரிசைப்படி தருவது ________ . எனப்படும்?
1) அகராதி
2) கலைக்களஞ்சியம்
3) அகரவரிசை
4) களஞ்சியம்
10) கால்நடைகளை கட்டி வைக்கும் இடம் ________ எனப்படும்?
1) வீடு
2) குடிசை
3) பன்னசாலை
4) தொழுவம்