தமிழியல் வினா விடைகள்
1) ஏது, மூலம், வழி எனும் பல சொற்கள் தரும் ஒரு பொருள்?
1) புலர்
2) காரணம்
3) விஞ்சை
4) பரவை
2) எனக்கு BIOLOGY பாடம் மிகவும் விருப்பம் இங்கு BIOLOGY என்பதன் தமிழ் வடிவம்?
1) பொருளியல்
2) இரசாயனவியல்
3) பெளதீகவியல்
4) உயிரியல்
3) மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபம். இங்கு விழித்தாமரை என்பது?
1) உவமை
2) தற்குறிப்பேற்றம்
3) உயர்வு நவிற்சி
4) உருவகம்
4) நிறைய பணம் தருவதாக கூறி வேலைக்கு அழைத்து சென்று ஏமாற்றினான். என்பதை உணர்த்தும் அருஞ்சொற்றொடர்?
1) வெள்ளிடை மழை
2) ஆசைக் காட்டி மோசம் செய்தல்
3) ஏழை எளியவர் வாயிலடித்தல்
4) விரிகதிர் செல்வன்
5) “தம்பி அங்கிட்டு போகாதே” இங்கு அங்கிட்டு என்பதன் திருத்தமான வடிவம்?
1) அங்குட்டு
2) அந்த
3) பக்கம்
4) அந்தப்பக்கம்
6) நளவெண்பா எனும் நூலை எழுதியவர்?
1) கம்பர்
2) புகழேந்தி
3) ஓட்டக் கூத்தர்
4) நளன்
7) திருக்குறளில் உள்ள மொத்த குரல்களின் எண்ணிக்கை?
1) 1330
2) 133
3) 1033
4) 1303
8) அவன் பிச்சைக் காரனைக் கண்டு ஏளனம் செய்தான். இங்கு ஏளனம் செய்தல் என்பதைத் தரும் மரபுத்தொடர்?
1) முகமாதல்
2) வால்கட்டுதல்
3) வாய்விடுதல்
4) பல்லிளித்தல்
9) அவன் தலையை தடவினான். இங்கு தலையை தடவுதல் எனும் மரபுத் தொடர் தரும் பொருள்?
1) கேட்டல்
2) சிந்தனை செய்தல்
3) வருந்துதல்
4) ஓடுதல்
10) களவெடுத்தவன்கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டான். இவ்வாக்கியத்தில் கையும் மெய்யுமாக என்பது?
1) இரட்டைக்கிளவி
2) இணைமொழி
3) அடுக்குத்தொடர்
4) உவமைத்தொடர்