தமிழியல் வினா விடைகள்

1) “பெருந்த டங்கட் பிறைநுதலார்க் கெலாம்” இப்பாடல் வரியில் நுதல் என்பதன் பொருள்?
1) சந்திரன்
2) முகம்
3) நெற்றி
4) கண்
2) “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” இங்கு மிடுக்கு என்பதன் பொருள்?
1) வலிமை
2) வீரம்
3) எளிமை
4) ஒற்றுமை
3) “குன்றகழ் ஆக்கித் தெவ்வர்” இங்கு தெவ்வர் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) நண்பன்
2) வேடன்
3) பகைவர்
4) மன்னர்
4) அவன் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். இங்கு இல்லறம் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) நல்லறம்
2) தீயவறம்
3) துறவறம்
4) தர்மம்
5) அவன் தான் தலைவுயுடன் ஊடல் கொண்டான். இங்கு ஊடல் என்பதன் எதிர்ப்பதம்?
1) நாடல்
2) தேடல்
3) வாடல்
4) கூடல்
6) ரவிக்கு கந்தோரில் வேலை கிடைத்துள்ளது. இங்கு கந்தோர் என்பது?
1) வடமொழி
2) ஒல்லாந்து மொழி
3) பாரசீகம் மொழி
4) பாளி மொழி
7) சொத்து இல்லாதவர்களுக்கு வோர்ட் (VOTE) உரிமை வழங்கப்பட கூடாது என்று கூறப்பட்டது. இங்கு வோர்ட் என்பதன் தமிழ் வடிவம்?
1) உயிர் வாழ்தல்
2) உழைப்பு
3) சம்பளம்
4) வாக்கு
8) பன்றி உறுமும் என்பது போல ஆந்தை?
1) அலறும்
2) கத்தும்
3) பேசும்
4) பிளிரும்
9) கடுவனுக்கு மந்தி போல அலவனுக்கு?
1) பேடு
2) மடி
3) மறி
4) பெட்டை
10) இடும்பை,இன்னல்,இடுக்கன் இச்சொற்கள் தரும் ஒரு சொல்?
1) அயம்
2) துன்பம்
3) விந்தை
4) போசனம்
தேர்வு