தமிழியல் வினா விடைகள்

1) இணைப்பிடைச் சொல்லின் பின் காற்புள்ளி இடப்படும் என்பதற்கு உதாரணம்?
1) கண்ணே, கலங்குவது ஏன்?
2) இனி, ஆக வேண்டிய கருமங்களைக் கவனிப்போம்
3) கண்ணன், கர்ணனிடம் பாண்டவருக்காகத் தூது போனான்
4) தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம், சமயம், ஆங்கிலம், வரலாறு என்பன கருமபாடங்களாகும்
2) பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல் வரிசையைத் தெரிவு செய்க?
1) தேர்ச்சி,ஆராட்சி,தளர்ச்சி,இகழ்ச்சி
2) உடைமை,கயமை,தகமை,பகைமை
3) உற்சவம்,நிச்சயம்,முகூர்த்தம்,நாகரிகம்
4) கட்சி,ஆட்சி,மீட்ச்சி,மாட்சி
3) ஒரு வேலையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றித் தருவதாக ஒருவருக்கு ________ அளித்தல் அதனை மீறக்கூடாது.?
1) ஒப்பந்தம்
2) ஒப்படை
3) உச்சவரம்பு
4) உத்தரவாதம்
4) இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தருக்கு அவர் ஆற்றிய சேவைக்காக மாதமாதம் ________ வழங்கப்படும்?
1) ஓய்வூதியம்
2) மானியம்
3) வேதனம்
4) சன்மானம்
5) போதைவஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி இளைஞர் மத்தியில் ________ .மேற்கொள்ளப்படல் வேண்டும்.?
1) பிரசுரம்
2) பிரசாரம்
3) பிரகாரம்
4) பிரகடனம்
6) “வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது” தழல் எபதன் ஒத்த சொல்?
1) விறகு
2) நெருப்பு
3) வெப்பம்
4) நீர்
7) “பெருந்தடங்கண் பிறை நுதலார” நுதல் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) நெற்றி
2) கண்
3) புருவம்
4) கூந்தல்
8) “மனிதனை தேவனாக்கும் மகாகாவியமாக இறக்கிறது இராமாயணம்” காவியம் என்பதன் ஒத்த சொல்?
1) புராணம்
2) காப்பியம்
3) பிரபந்தம்
4) பரணி
9) “பாரதியாரின் பாடல்களைப் பாமரரும் படித்து இன்புறுகின்றனர்” பாமரர் என்பதன் எதிர் கருத்து சொல்?
1) கவிஞர்
2) அரசர்
3) மாந்தர்
4) பண்டிதர்
10) “முல்லைக்கு தேர் தந்தான் வள்ளல் பாரி; வள்ளல் என்பதன் எதிர் கருத்து சொல்?
1) ஊதாரி
2) கொடையாளி
3) உலோபி
4) ஆண்டி
தேர்வு